பெண்களை விட ஆண்களின் தசை அடர்த்தி அதிகம் என்பதால் பெண்களை விட ஆண்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, பிரஸ்ஸாக கிடைக்கும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களைச் சாப்பிடலாம்.
இந்திய உணவு முறைகள்:
பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள், மீன் மற்றும் விளைபொருட்களில் கவனம் செலுத்தும் மத்தியதரைக் கடல் உணவு முறைகளைப் பின்பற்றி, நம்முடைய இளமையை தக்க வைத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு பருப்புகளை சாப்பிடுவது இளமையின் அடையளமாக இருக்கும். மேலும் பருவ கால காய்கறிகளுடன் சேர்த்து கிச்சடி போன்றவற்றை சமைத்து உட்கொள்ளலாம். இவை பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவதோடு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்குவகிக்கிறது.