முன்னாள் காதல் கதைகள் வேண்டாம்
திருமணமான ஆர்வமிகுதியில் ஆண்கள் பலர் தங்களுடைய மனைவிகளிடத்திலும் முன்னாள் காதல் குறித்து வெளிப்படையாக பேசுவதுண்டு. ”அதுபோன்ற அனுபவம் உனக்கும் இருக்கிறதா?” என்று அவர்கள் மனைவியிடத்திலும் கேட்பார்கள். அப்போது கணவனை குறித்து பெருமையாக எண்ணும் மனைவிமார்கள் சிலர், தங்களது பழையக் காதலை குறித்து வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.
அப்படி சொல்லும் பெண்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பிரச்னையை சந்திக்கப்போவது உறுதி. பழைய காதலர் குறித்து மனைவி பேசினால், ஆண்களின் ஈகோ தலைதூக்க ஆரம்பிக்கும். திருமணமான புதிதில் பெரியளவில் தாக்கம் இருக்காது என்றாலும், எதிர்வரும் நாட்களில் பெண்களிடம் பழைய காதல் விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து விடும்.
முன்னதாக காதலர், இப்போது நண்பரா?
சூழ்நிலை காரணமாக பிரிந்துச் சென்ற காதலரை, திருமணத்துக்கு பிறகு ஏதேனும் தருணத்தில் நீங்கள் சந்தித்க நேரலாம். அப்போது பழைய காதலர் இருந்தவர், அதற்கு பிறகு நண்பராகிவிடுவார். ஏற்கனவே காதலர்களாக இருந்தவர்கள் என்பதால், அந்த நட்பு மிகவும் நெருக்கமானதாக உருவெடுக்கும். ஆனால் முன்னாள் காதலர் தான் இப்போது என் நெருங்கிய நண்பர் என்று கணவரிடம் எப்போதும் கூறிவிடாதீர்கள். அது அந்த நட்புக்கும் கணவனுடான இல்லறவாழ்க்கைக்கும் ஆபத்தாக முடியும்.
Male Fertility Tips: ஆண்களின் விந்தணுக்களை மடமடவென அதிகரிக்க...சாப்பிட வேண்டிய பெஸ்ட் உணவுகள் இதுதான்..
உடல் கவர்ச்சிக்கூட ஆரோக்கியம் தான்
பெண்களுக்கு எப்போதும் தங்களுடைய கணவர்கள் மன்மதன் போல இருக்கவேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் பணி காரணமாகவும், வேறு சில பொறுப்புகள் கொண்டும் மேனி பராமரிப்பு மீது ஆண்கள் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது. இதை கவனிக்கும் மனைவிமார்கள், கணவனின் உடல் ஆரோக்கியம் குறித்து பக்குவாக எடுத்து கூற வேண்டும். கணவனின் உடலமைப்பு பிடிக்கவில்லை, உடலில் சில பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லக் கூடாது.
இதுவும் ஆண்களின் ஈகோவுக்கு தீணி போடுவது போல இருந்துவிடும். உடல அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை இயல்பாக எடுத்து சொல்லுங்கள். அதற்கேற்றவாறு நீங்கள் உங்களுடைய உடல் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திடுங்கள். இப்படி மறைமுகமாக தேவையை எடுத்துச் செல்வதன் மூலம் உடல் கவர்ச்சி அதிகரித்து கணவன், மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
Sex prediction: உங்கள் கருவில் உள்ளது ஆண் குழந்தையா.? பெண் குழந்தையா..?..சுலபமாக கண்டறிய அட்டகாசமான டிப்ஸ்..
ஆபாசம் இருந்தாலும் அடக்கம் வேண்டும்
திருமணமான புதிதில் முன்னாள் காதலர் கதைகளை மனைவிகள் கணவரிடம் தெரிவிக்கக்கூடாது என்பது எந்தளவுக்கு உண்மையோ..! அதேபோன்று, மனைவிக்குள் இருக்கும் ஆபாச எண்ணங்களை கணவரிடம் வெளிப்படையாகக் கூறக்கூடாது என்பதும் உண்மை தான். ஆபாச எண்ணங்கள் தோன்றுவது இயல்பு தான். அது மனித இயற்கை.
ஆனால் அதை ஒரு ஆண் வெளிப்படுத்துவதற்கும், பெண் வெளிப்படுத்துவதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ அதை நம் சமூகத்தில் பரவலாக நடைமுறையில். இப்போது திருமணம் செய்யும் ஆண்கள் பலர், திருமணத்துக்கு பிறகு தான் பெண்களை குறித்து தெரிந்துகொள்கின்றனர். அதனால் அவசரப்பட்டு ஆர்வமிகுதியில் உங்களுடைய ஆபாச எண்ணங்களை கணவனிடம் வெளிப்படுத்திவிடாதீர்கள்.
Relationship Tips: ஆண்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்க..தினமும் இரவில் பால் கூட இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க
இதனால் பெண்களின் இயல்புகளை புரிந்துகொள்ளும் அவர்களுடைய வழிமுறையில் தடங்கல் நேரிடும். இதன்காரணமாக மனைவிகளை அவர்கள் தவறாக நினைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆபாச எண்ணங்களை மனைவிகளிடம் நேரடியாக வெளிப்படுத்தும் ஆண்கள் குறைவு தான். அதனால் இந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமிருந்தாலும், அதை அடக்கத்துடன் பெண்கள் கையாள்வது சுமூகமாக அமையும்.
குடும்ப உறவுகளும் அலுவலக பணிச் சூழலும்
இன்றைய காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் பலர், தனிக்குடித்தனம் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அப்படி தனியாக சென்றுவிடும் பெண்கள் பலர், தனது தாய் வீட்டாருடன் உறவை வளர்த்துக் கொண்டு, கணவர் வீட்டாரிடம் பாராமுகம் காட்டுகின்றனர். ஆரம்பத்தில் கணவர் தாளத்துக்கு ஏற்றவாறு இசைந்து வந்தாலும், எதிர்வரும் நாட்கள் திருப்பத்துடன் இருக்கும் என்பதே உண்மை.
அதனால் தாய் வீட்டுடன் காட்டும் பாசம், பரிவை கணவர் வீட்டாரிடமும் காட்டுங்கள். அப்போது உருவாகும் உறவில் சிற்சில பிரச்னைகள் வரும் போகும். அதை எல்லாவற்றையும் குறித்து கணவனிடம் நீங்கள் சொல்லக்கூடாது. குறிப்பாக மாமியார், நாத்தனார் குறித்து ஆதாரமற்ற புகார் கூறக்கூடாது. அப்படி செய்யும் பெண்களை ஆண்கள் விரும்ப மாற்றார்கள். உறவுகள் விஷயத்தில் பெண்கள் நடுநிலைத் தன்மையை கடைப்பிடிப்பது இல்லறவாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும்.
Mobile Phone: செல்போனை இந்த நேரத்தில் மட்டும் கட்டாயம் யூஸ் பண்ணாதீங்க...மீறினால் என்ன பாதிப்பு தெரியுமா..?
அதேபோன்று கணவனின் அலுவலகச் சூழலை அறிய முற்படக்கூடாது. அது அவருடைய இடைவெளி, அதில் நீங்கள் தலையிட முடியாது. அதேபோன்று உங்களுடைய வெளிக்குள்ளும் கணவனை அனுமதிக்க வேண்டும் என்பது கிடையாது. கணவன் மனைவியாக இருந்தாலும், சம்மந்தப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு பொறுப்புகள் உண்டு. அதில் எல்லாவற்றிலும் உரிமைக் கோரும் பெண்கள் கணவன்மார்கள் விட்டு விலகியே இருப்பார்கள்.