செய்முறை விளக்கம்:
முதலில், இந்த எல்லா பொருட்களும் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக ஆட்டி எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பொருட்களை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. அடை மாவு பக்குவத்தில் கொஞ்சம் திக்காகவே இருக்கட்டும்.