ஆண் மலட்டுத்தன்மை, இன்றைய இளைஞர்கள் பலரும் தற்போது சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். கட்டுப்பாடு இல்லாத மேற்கத்திய உணவு பழக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாவது, வகை முறை மாற்றம் உள்ளிட்ட சில இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..
ஆண் மலட்டுத்தன்மை வைட்டமின் அல்லது துத்தநாகக் குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு சில உணவு மாற்றங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அப்படியாக, ஆண் மலட்டுத்தன்மையை போக்கவும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் சிறந்த உணவுகளை பற்று இங்கே தெரிந்து வைத்து கொள்வோம்.
Male Fertility Tips:
அஸ்வகந்தா
அஸ்வகந்தா விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆண்களின் வந்தனுக்கள் மூலமாக பெண்கள் கருவுறும் அளவும், பாலியல் ரீதியான செயல்பாட்டை அதிகரிக்கவும் அஸ்வகந்தா முக்கிய பொருளாக பயன்படுகிறது.
நல்ல கொழுப்பு உணவுகள் சேர்த்தல்:
ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் வடிவமும் தரமாக இருக்கும்.
Male Fertility Tips:
சோயா:
சோயா சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணு செறிவு, இயக்கம் உருவம், மற்றும் விந்துவை கருப்பைக்குள் செலுத்தும் அளவுக்கு திறன் ஆகியவை சராரியாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.