Male Fertility Tips: ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 சூப்பர் உணவுகள்...மிஸ் பண்ணீடாதீங்க...
Male Fertility Tips: ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் எவை என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Male Fertility Tips
கருவுறாமை பிரச்சனைக்கு பெண்களை குறை சொல்லும், இந்த சமூகம் ஆண்களை கண்டு கொள்வதே இல்லை. எனவே, ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு
பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இன்றைய நவீன முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர்.
Male Fertility Tips
ஆண்களில் கருவுறாமை பொதுவாக குறைந்த விந்தணுக்களின் விளைவாகும். குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடைய ஆண் மலட்டுத்தன்மை வைட்டமின் அல்லது துத்தநாகக் குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு சில உணவு மாற்றங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். எனவே ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் எவை என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
tomato juice
தக்காளி:
தக்காளியை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது, ஆண்களின் விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது விந்து இயக்கம், கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. எனவே தக்காளி உட்கொண்டால் ஆண்களில் விந்தணுக்களின் இயக்கத்தை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.
மாதுளை:
மாதுளையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அவை டெஸ்டோஸ்டிரோன் அளவையும் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துவதாகவும், பாலியல் இயக்கி அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
நல்ல கொழுப்பு உணவுகள் சேர்த்தல்:
ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் வடிவமும் தரமாக இருக்கும்.
டார்க் சாக்லேட்டுகள்:
இவற்றில் உள்ள சில சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் விந்து அணுக்களின் நீந்து சக்தி உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட்களிலும் அதிகமாக உள்ளது, இது விந்தணுக்களின் தரத்தை பாதிக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகிறது.
Male Fertility Tips
பூசணி விதைகள்:
பூசணிக்காய் விதைகள் ஆண்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பூசணி விதைகளில் அதிகம் ஸிங்க் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன், விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் உயிர்ச்சத்து ஆகியவற்றின் சீரம் அளவை அவை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.