Male Fertility Tips: ஆண்களின் விந்தணுக்களை மடமடவென அதிகரிக்க...சாப்பிட வேண்டிய பெஸ்ட் உணவுகள் இதுதான்..
Male Fertility Tips: இன்றைய மேற்கத்திய உணவு பழக்கவழக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாவது உள்ளிட்டவை ஆண்களின் விந்தணு குறைபாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆண் மலட்டுத்தன்மை, இன்றைய இளைஞர்கள் பலரும் தற்போது சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். கட்டுப்பாடு இல்லாத மேற்கத்திய உணவு பழக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாவது, வகை முறை மாற்றம் உள்ளிட்ட சில இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆண் மலட்டுத்தன்மை வைட்டமின் அல்லது துத்தநாகக் குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு சில உணவு மாற்றங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். அப்படியாக, ஆண் மலட்டுத்தன்மையை போக்கவும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் சிறந்த உணவுகளை பற்று இங்கே தெரிந்து வைத்து கொள்வோம்.
Male Fertility Tips:
அஸ்வகந்தா
அஸ்வகந்தா விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆண்களின் வந்தனுக்கள் மூலமாக பெண்கள் கருவுறும் அளவும், பாலியல் ரீதியான செயல்பாட்டை அதிகரிக்கவும் அஸ்வகந்தா முக்கிய பொருளாக பயன்படுகிறது.
நல்ல கொழுப்பு உணவுகள் சேர்த்தல்:
ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் வடிவமும் தரமாக இருக்கும்.
Male Fertility Tips:
ஜிங்க்:
ஆண்களின் விந்தணு உற்பத்தி மற்றும் விரைப்பைகளின் வளர்ச்சியை அதிகரிக்க ஜிங்க் முக்கிய பொருளாக பயன்படுகிறது. ஜிங்க் உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்பொது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் புரோஸ்டேட் சுரப்பி மற்றும் பாலியல் ஆர்வத்தை தூண்டக்கூடிய ஹார்மோன்களின் அளவை சமன் செய்து விந்தணு பாதிப்பை சரி செய்ய உதவுகிறது சிவப்பு இறைச்சி, பார்லி, பீன்ஸ், உள்ளிட்ட உணவு பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.
Male Fertility Tips:
சோயா:
சோயா சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணு செறிவு, இயக்கம் உருவம், மற்றும் விந்துவை கருப்பைக்குள் செலுத்தும் அளவுக்கு திறன் ஆகியவை சராரியாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Male Fertility Tips:
வைட்டமின் டி:
வைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவகேடோ, சாலமன் மீன் காட் லிவர் ஆயில், முட்டை, உலர் திராட்சை, வாழைப்பழம், மாதுளை, ப்ளூ பெர்ரி, வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க உதவும். எனவே, தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன.