வெயில் காலத்தில் தலைமுடிதான் பெரிய தலைவலி. வேர்வையினால் முடி கொட்டுவது, பிசுபிசுப்பு, அரிப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். இதோ, உங்களை ‘கூல்’ ஆகவும் ‘கிளாஸ்’ ஆகவும் மாற்றும் சில ஐடியாக்கள்.
சாதாரண கொண்டை (Bun) போடுவதற்கு பதில், உங்கள் கொண்டையைச் சுற்றி ஒரு மெல்லிய பருத்தி ஸ்கார்ஃப் அல்லது வண்ணமயமான துணியைக் கட்டுங்கள். இது உங்கள் கூந்தலுக்கு ஒரு ராயல் லுக் கொடுப்பதுடன், சூரிய கதிர்கள் நேரடியாக ஸ்கால்ப்பில் பட்டு முடி செம்பட்டையாவதைத் தடுக்கும்.
26
ஆண்களுக்கு: 'ஸ்கின் ஃபேட்' வித் டெக்ஸ்சர் :
கோடையில் ஆண்களுக்குப் பின் கழுத்துப் பகுதியில் அதிக வியர்வை தேங்கும். இதற்கு 'ஸ்கின் ஃபேட்' (Skin Fade) கட் மிகச்சிறந்தது. மேலே உள்ள முடியை மட்டும் கொஞ்சம் நீளமாக விட்டு 'மெஸ்ஸி' (Messy) லுக் கொடுத்தால், ஆபீஸ் மற்றும் பார்ட்டி என இரண்டிற்கும் கச்சிதமாக இருக்கும்.
36
பெண்களுக்கு: 'பப்புள் பொனிடைல்'
வழக்கமான ஒற்றை ஜடை அல்லது பொனிடைலுக்கு பதில், ஆங்காங்கே ரப்பர் பேண்ட் போட்டு 'பப்புள்' போல முடியை விரிய விடுங்கள். இதனால் முடி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் காற்றோட்டமாக இருக்கும். கழுத்து பகுதியில் வியர்வை அரிப்பு ஏற்படாது. ஜிம் அல்லது அவுட்டோர் ட்ரிப்களுக்கு இதுதான் பெஸ்ட்.
முடி நீளமாக வளர்க்கும் ஆண்களா நீங்கள்? கோடையில் முடியை விரித்துப் போடாதீர்கள். 'டாப் நாட்' (Top Knot) எனப்படும் உச்சிக்கொண்டை போடுங்கள். கொண்டை போடுவதற்கு முன் கொஞ்சம் 'சீ சால்ட் ஸ்ப்ரே' (Sea Salt Spray) பயன்படுத்தினால் முடி கலையாமல் அப்படியே இருக்கும்.
56
பெண்களுக்கு: 'டபுள் ஃப்ரெஞ்ச் பிளெய்ட்'
இரட்டை ஜடை என்பது பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமல்ல! இப்போது இது பெரியவர்களுக்கும் செம டிரெண்ட். தலைமுடி முழுவதுமாக பின்னப்பட்டு விடுவதால், காற்றில் முடி பறந்து முகத்தில் விழுந்து எரிச்சலூட்டாது. ஹெல்மெட் போடுபவர்களுக்கு இது மிக வசதியான ஸ்டைல்.
66
கோடை கால ஹேர்-கேர் சீக்ரெட்!
ஸ்டைல் மட்டும் போதாது, பராமரிப்பும் முக்கியம். வாரம் இருமுறை கற்றாழை ஜெல்லால் மசாஜ் செய்யுங்கள். இது தலையை ஜில்லென்று வைத்திருக்கும். வெயில் காலத்தில் சுடுநீரில் தலைக்கு ஊற்றுவதை முற்றிலும் தவிர்க்கவும். இது முடியின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.