அம்மா அல்லது பாட்டியின் பழைய பட்டுப்புடவைகள் வெறும் துணி மட்டுமல்ல, அவை அழகான நினைவுகள்.ஆனால், ஒரே மாதிரி கட்டி போர் அடித்தால், அவற்றை டிரெண்டியான உடைகளாக மாற்றலாம். பீரோவில் இருக்கும் பட்டுப்புடவைகளை "மாஸ்" காட்ட உதவும் 6 சூப்பர் ஐடியாக்கள் இதோ!
புடவையின் பார்டரை மட்டும் வைத்து ஒரு நீளமான 'ஷ்ரக்' (Shrug) தைத்துப் பாருங்கள். இதை ஒரு சாதாரண வெள்ளை நிற டாப் மற்றும் ஜீன்ஸ் உடன் அணிந்தால், நீங்கதான் அந்த பார்ட்டியின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்! புடவையின் முந்தானையை ஷ்ரக்கின் பின்புறம் வருவது போல் டிசைன் செய்தால் இன்னும் ராயலாக இருக்கும்.
26
பட்டுப்புடவை 'அனார்கலி'
முழு புடவையையும் அனார்கலி சுடிதார் போல மாற்றுவது பழைய ஸ்டைல். இப்போது டிரெண்ட் என்ன தெரியுமா? புடவையை அனார்கலியாக தைத்து, அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் ஒரு பெல்ட் (Waist Belt) அணிவதுதான். இது உங்களை இன்னும் ஸ்லிமாகவும், உயரமாகவும் காட்டும்.
36
கிராப் டாப் & ஸ்கர்ட்
புடவையின் ஒரு பாதியை பாவாடையாகவும் (Full Skirt), மீதமுள்ள பகுதியை ஒரு ஸ்டைலான கிராப் டாப்பாகவும் மாற்றலாம். கிராப் டாப்பை தைக்கும் போது ஸ்லீவ்லெஸ் அல்லது பலூன் ஸ்லீவ் வைத்தால், அது பட்டுப்புடவைக்கு ஒரு மார்டன் டச் கொடுக்கும்.
யாரும் யோசிக்காத ஒரு ஐடியா இது! பட்டுப்புடவையில் ஒரு ஜம்ப் சூட் தைத்து, அதன் இடுப்பு பகுதியில் பார்டரை வைத்து ஹைலைட் செய்யுங்கள். பாரம்பர்யமும் மாடர்னும் கலந்த ஒரு கில்லர் லுக் இது. காலேஜ் பங்க்ஷன்களுக்கு இது செம மாஸாக இருக்கும்.
56
முந்தானை 'கிளட்ச்' மற்றும் ஹேண்ட் பேக்
புடவை ரொம்பவே பழுதாகிவிட்டது என்றால் கவலைப்படாதீர்கள். அதன் அழகான முந்தானையை வெட்டி எடுத்து ஒரு 'கிளட்ச்' (Clutch) அல்லது ஹேண்ட் பேக் தயார் செய்யுங்கள். எந்த சாதாரண உடை அணிந்தாலும், இந்த பட்டு பேக் உங்கள் லுக்கை வேற லெவலுக்கு கொண்டு செல்லும்.
66
ஹோம் டெக்கர் மேஜிக்
உடையைத் தாண்டி, உங்கள் வீட்டு வரவேற்பு அறையை ஜொலிக்க வைக்கலாம். பழைய பட்டு துணிகளை வைத்து 'குஷன் கவர்' (Cushion Covers) அல்லது 'டேபிள் ரன்னர்' (Table Runner) தைக்கலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் உங்கள் ரசனையைப் பார்த்து வியப்பது உறுதி.