Miss India 2026: வெறும் 3 மாத பயிற்சி... உலக அழகி போட்டிக்கு தகுதி.. யார் இந்த சாத்வி செய்ல்? மிஸ் இந்தியா சீக்ரெட் கதை!

Published : Apr 19, 2026, 05:29 PM IST

Miss India 2026: மிஸ் இந்தியா வேர்ல்டு 2026 பட்டத்தை கோவாவைச் சேர்ந்த சாத்வி செய்ல் வென்றுள்ளார். தொழிலதிபராக இருந்து அழகிப் பட்டத்தை வென்ற இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
15
மிஸ் இந்தியா கிரீடம் வென்ற சாத்வி செய்ல்

ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2026 போட்டி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் கோவாவைச் சேர்ந்த சாத்வி சதீஷ் செய்ல், இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா வேர்ல்டு பட்டத்தை வென்றார். யார் இந்த சாத்வி செய்ல்? என்பது குறித்து காண்போம்.

25
யார் இந்த சாத்வி செய்ல்?

சாத்வி செய்ல் கோவாவைச் சேர்ந்த ஒரு மாடல் மற்றும் தொழிலதிபர். இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சாத்வி செய்ல் தனது கட்டுமான நிறுவனம் மட்டுமின்றி, தேனீ வளர்ப்பு, மண்பாண்டம் செய்தல், புகைப்படம் எடுத்தல் போன்ற பல பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் கொண்டவர். ஓய்வு நேரங்களில் இவற்றில் ஈடுபடுகிறார்.

35
சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்

கோவாவின் டாப் மாடலாக அறியப்படும் சாத்வி செய்ல், பல சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்குவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார். 

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக பல நிகழ்ச்சிகளை சாத்வி நடத்தியுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்டி, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவி வருகிறார். பின்தங்கிய கிராமங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்

45
30 போட்டியாளர்கள் பங்கேற்றனர்

கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) வளாகத்தில் நடந்த இறுதிப் போட்டியில், மகாராஷ்டிராவின் ராஜநந்தினி பவார் முதல் ரன்னர்-அப்பாகவும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீ அத்வைதா ஜி இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று இரவு நடந்த வண்ணமயமான விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

 முன்னாள் மிஸ் இந்தியா-க்களான நிகிதா போர்வால், ரேகா பாண்டே, ஆயுஷி தோகலா ஆகியோர் புதிய வெற்றியாளருக்கு கிரீடம் சூட்டி வாழ்த்தினர். நாடு முழுவதிலும் இருந்து 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கர்நாடகாவின் குஷி ரமேஷ் கல்கேரியும் இதில் ஒருவர். சாத்வி, மிஸ் வேர்ல்டு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்.

55
ரூ.1 லட்சம் பரிசு

KIIT மற்றும் KISS நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் அச்யுதா சமந்தா, வெற்றியாளர்களைப் பாராட்டினார். "இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். எங்கள் நிறுவனத்தில் இந்தப் போட்டியை நடத்தியது பெருமையாக உள்ளது" என்று அவர் கூறினார். 

டாக்டர் அச்யுதா சமந்தா, வெற்றியாளர் சாத்வி செய்லுக்கு ரூ.1 லட்சமும், ரன்னர்-அப்களுக்கு தலா ரூ.50,000-மும் தனது நிறுவனத்தின் சார்பில் வழங்கினார். ஜவுளி அமைச்சகப் பிரதிநிதி எம். பீனா, சட்ட அமைச்சர் பிருத்விராஜ் ஹரிசந்தன், மேயர் சுலோச்சனா தாஸ், டைம்ஸ் குழுமத்தின் வினீத் ஜெயின் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Read more Photos on
click me!

Recommended Stories