
ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் தங்களது உணவில் முட்டை சேர்த்து கொள்வார்கள். முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தவிர, முட்டையில் கலோரிகள், வைட்டமின் பி12, வைட்டமின் பி2, வைட்டமின் டி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினம் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
முட்டை ஆரோக்கியத்தை பராமரிப்பது மட்டுமின்றி, அவற்றின் உதவியுடன் நீங்கள் உங்களது எடையையும் குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பொதுவாக உடலில் இருக்கும் புரதம் எடையை குறைப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதற்கு நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை சாப்பிடலாம். ஏனெனில் இதில் புரதத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. இது உங்களுக்கு தேவையான ஆற்றலை தருவது மட்டுமின்றி உங்களது வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கவும் உதவுகிறது. இதனால் உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
கூடுதலாக முட்டை சாப்பிட்டால் உங்களது தசை வலுவாகவும் இருக்கும். ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முட்டை சாப்பிடும் போது சில தவறுகளை செய்யக்கூடாது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: முட்டையை எப்போது சாப்பிட வேண்டும்? யார் முட்டையை சாப்பிடவே கூடாது தெரியுமா?
உடல் எடையை குறைக்க முட்டை சாப்பிடும் போது செய்யக்கூடாத தவறுகள்:
மஞ்சள் கரு சாப்பிடாதே
முட்டையின் மஞ்சள் கரு ஆரோக்கியமற்றது மற்றும் எடை இழப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் முட்டையின் மஞ்சள் கருவில் நார்ச்சத்து வைட்டமின் பி12, வைட்டமின் ஏ மற்றும் ஈ, துத்தநாகம், சோடியம், பொட்டாசியம், இரும்பு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பல உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரு முழு முட்டையை உட்கொள்ளலாம். அதுவும் உடல் எடையை குறைக்க உதவும்.
முட்டை சாப்பிடுவதற்கான நேரம்
ஆரோக்கியமாக இருக்க முட்டை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே முட்டைகளை சாப்பிடுபவர்கள். உதாரணமாக, பலர் காலை உணவாக மட்டுமே முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி இருப்பது தவறு. நீங்கள் உடல் எடையை குறைப்பதில் ஈடுபட்டிருந்தால் நாளின் எந்த நேரத்திலும் முட்டையை சாப்பிட்டாலும் தவறில்லை.
எண்ணெய்
நீங்கள் முட்டையை பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம் அதுவும் குறிப்பாக நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது தான் சிறந்தது.
அதிகமாக சமைக்காதே
முட்டையை அதிக நேரம் சமைத்தால் அதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம். மேலும் அதிக வெப்பநிலையில் முட்டை சமைக்கும் போது அதில் இருக்கும் கொலஸ்ட்ரால் ஆக்சிஜனேற்றம் அடைந்து இதய நூலின் அபாயத்தை அதிகரிக்கும் கலவையை உருவாக்கும்.
தவறான கலவை
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கீரை, தக்காளி, கேப்ஸிகம் போன்ற நார்ச்சத்து நிறைந்த மற்றும் ஆரோக்கியமான காய்கறிகளுடன் முட்டை சேர்த்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க: இந்த '7' மூலிகைகள் போதும்.. உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் சக்தி உண்டு!!
கலோரிகள் தேவை
உடல் எடையை குறைப்பதற்கு கலோரிகள் அதிகம் தேவை என்பதால், நீங்கள் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்த வழி.
சரியான முட்டையை தேர்ந்தெடுப்பது
நீங்கள் கடைகளில் முட்டை வாங்கும் முன் பேக்கேஜிங் மற்றும் காலாவதி தேதியை முதலில் சரிபார்த்து வாங்குவது தான் நல்லது.
முக்கிய குறிப்பு : உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் வாரத்திற்கு மூன்று முட்டைகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அளவுக்கு அதிகமாக முட்டையை சாப்பிடக்கூடாது. அப்போதுதான் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.