
இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் இரவு 8 மணிக்குள்ளாக உணவு உண்பது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படி சீக்கிரம் சாப்பிடுவதால் சிலருக்கு தூங்கும் முன்னர் அல்லது தூங்கிய பின்னர் பசி வயிற்றைக் கிள்ளும். இதனால் அவர்கள் சரியாக தூங்க முடியாது. இதனால் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும்.
இந்த பசியைப் போக்க ஏதாவது சாப்பிட்டால் போதும் என நினைக்கத் தோன்றும். ஆனால் சாப்பிட்டவுடன் தூங்கவும் முடியாது. இரவு சாப்பாட்டிற்கு பின்னர் மீண்டும் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் சர்க்கரை நோயாளிகள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்.. எந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பது குறித்து இங்கு காணலாம்.
இரவு தூங்கச் செல்லும் முன் அல்லது தூக்கத்திற்கு பிறகு மீண்டும் பசி எடுத்தால் உடனடியாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். சில சமயங்களில் தாகத்தை நாம் பசியென நினைத்துக் கொள்கிறோம். தண்ணீர் குடித்த பிறகும் உங்களுக்கு பசிப்பது போல இருந்தால் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ள உணவு அல்லது ஏதேனும் கலோரி குறைவாக காணப்படும் உணவுகளை தேர்வு செய்து உண்ண வேண்டும். உறங்கும் முன்பாக புரதம் மிகுந்த கொழுப்பு குறைவாக இருக்கும் உணவுகளை உண்ணலாம். இதுவே சர்க்கரை நோயாளிகளுக்கு இரவில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
பொதுவாக இரவு நேரங்களில் இரத்த சர்க்கரை அளவு வேறுபடும். டைப் 1 அல்லது டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகாலையில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். உறங்கும் முன்னர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இது மாதிரி ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வை தடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் ஒவ்வொருவரின் உடலுக்கும் மாறுபடும். அதனால் உங்கள் மருத்துவர்களிடமும் கேட்டுக் கொள்ளுங்கள்.
அவித்த முட்டை:
புரதச்சத்து மிகுந்த உணவுகளில் முட்டையும் ஒன்று. இதனை பொரித்து சாப்பிடுவதை விட வேக வைத்து உண்பது நல்லது. ஒரு பெரிய முட்டையில் சுமார் 6.29 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் குறைவான அளவில் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர செய்யாது. வெறும் முட்டையை உண்ணாமல் நார்ச்சத்து மிகுந்த முழுதானியங்களை இத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
நட்ஸ் உருண்டை:
வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை ஒரு கைப்பிடி அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதனை கொறித்து விட்டு தூங்க செல்வது பசியை போக்கும். இவற்றில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், நல்ல கொழுப்புகள் உள்ளன. பாதாம் பருப்பில் காணப்படும் வைட்டமின் ஈ, அக்ரூட் பருப்பில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நல்லது.
இதையும் படிங்க: சர்க்கரை நோய் கட்டுக்குள் வர.. ஈஸியான வழி இருக்கு.. 'இப்படி' வாக்கிங் போனா போதும்!!
சாலட்:
வெள்ளரி குறைந்த கலோரி கொண்டவை. இதனுடன் பேபி கேரட், வெள்ளரி துண்டுகள் ஆகியவை கலந்து சாலட் போல உண்ணலாம். உங்களுக்கு அதிக புரதம் கிடைக்க இந்த சாலட்டில் குறைந்த கொழுப்பு சீஸ் துண்டுகளை சேர்க்கலாம். மாவுச்சத்து கொண்ட காய்கறிகள் கார்போஹைட்ரேட் நிறைந்தவை. அவற்றை தவிர்க்க வேண்டும்.
வெள்ளை கொண்டைக்கடலை:
செலரி கீரை தண்டில் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து உள்ளது. இதனை புரதச்சத்து உள்ள வெள்ளை கொண்டைகடலையுடன் உண்ணலாம். தேவைப்பட்டால் மாவுச்சத்து காணப்படாத இன்னொரு காய்கறியை கூட சேர்த்து கொள்ளலாம். கொண்டைக்கடலை மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு கொள்ளலாம்.
பாப்கார்ன்:
பார்கார்ன் ஆரோக்கியமான தின்பண்டமாகும். இதை உண்பதால் மன அழுத்தம் கூட குறையும். சோளத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் ஆகியவை காணப்படுகின்றன. பார்கார்னை ஆரோக்கியமான முறையில் தயார் செய்து சாப்பிடுவது நல்லது. வெண்ணெய் சேர்த்து பாப்கார்ன் செய்யலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!
வறுத்த கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலை உடலுக்கு நல்லது. இதில், புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. ஒரு கப் கொண்டைகடலையில் 11.81 கிராம், 10.6 கிராம் முறையே புரதமும் நார்ச்சத்தும் உள்ளது. இதனை வறுத்து சாப்பிடலாம். அவித்து கேரட் மாதிரியான கார்போஹைட்ரேட் இல்லாத காய்கறிகளோடும் சாப்பிடலாம்.
வேர்க்கடலை வெண்ணெய்:
வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter) பல சத்துக்கள் நிறைந்தது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் நல்ல உணவு. இதனுடம் ஆப்பிள் உண்ணலாம். இப்படி சாப்பிட்டால் பல வைட்டமின்கள், தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகள் கிடைக்கும். ஒரே ஒரு ஆப்பிளை துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொரு துண்டிலும் வேர்க்கடலை வெண்ணெய்யை தடவி உண்ணலாம்.
விதைகள்:
நட்ஸ் சாப்பிடுவது போல விதைகளும் சாப்பிடக் கூடியவை தான். சாலட்டுகள் மீது இந்த விதைகளை தூவி உண்ணலாம். சூரியகாந்தி, எள், பூசணி விதைகளில் செய்யும் உணவுகளை சாப்பிட்டால் புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கும்.