
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சுமார் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஏனெனில் தாயின் பாலில் தான் குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்புக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
தாய்ப்பால் குழந்தையை தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, தாய்க்கும் குழந்தைக்கு இடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சில தாய்மார்கள் தங்களுக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கிறது என்று சொல்லுகிறார்கள். இது உடல் ரீதியான சில பிரச்சனைகளின் வெளிப்பாடாகும். அதிலும் குறிப்பாக சில பெண்கள் தங்களுக்கு சரியாக தாய்ப்பால் சுரக்கவில்லை என்று சொல்லி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்தி விடுகிறார்கள்.
தைராய்டு பிரச்சினை, மற்ற ஹார்மோன் குறைபாடுகள், தூக்கமின்மை, முறையற்ற உணவு பழக்கம், ரத்த சோகை போன்றவை தாய்ப்பால் சுரப்பு குறைவதற்கு காரணமாக இருக்கலாம் என்பதால் பாலூட்டும் தாய்மார்கள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.
இத்தகைய நிலையில், தாய்ப்பால் குறைவதற்கு தாய்மார்கள் செய்யும் சில தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.. தாய்ப்பால் கொடுப்பதால் இத்தனை நன்மைகளா?
தாய்ப்பால் குறைவதற்கு தாய்மார்கள் செய்யும் தவறுகள் :
நீர்ச்சத்து இல்லாதது:
பெண்களின் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் தாய்ப்பால் பற்றி குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது தங்களின் நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குடிக்கும் நீர் மற்றும் திரவங்களின் அளவு அவர்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியுடன் தொடர்புடையது. எனவே தாய்ப்பாலூட்டும் பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 4 கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது:
பாலூட்டும் தாய்மார்கள் தங்களது உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக குறிப்பாக அவர்கள் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். இதனால்
குழந்தையின் வளர்ச்சியும் தடைப்படும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். எனவே, பாலூட்டும் தாய்மார்கள் புரதங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஐ ஹேவ் நிரந்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மன அழுத்தம்:
பாலூட்டும் பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்க கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் அதிகமான அழுத்தம் தாய்ப்பாலின் உற்பத்தியை பாதிக்கும். அதாவது தாய்ப்பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன்கள் மார்பகங்களில் பால் சுரப்பதை மன அழுத்தம் தடுக்கிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மன அழுத்தம் ஏற்படும். ஆனால் அது சகஜம் தான். ஆனால் எப்போதும் மன அழுத்தத்தில் இருந்தால் அது தாய்ப்பால் சுரப்பை குறைத்து விடும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றன. பாலூட்டும் தாய்மார்கள் மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சி செய்யலாம்.
நினைவில் கொள் :
புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய்மார்கள் ஒரு நாளைக்கு சுமார் 8-12 முறை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதாவது பாலூட்டும் தாய்மார்கள் ஒவ்வொரு நான்கு மணி நேரம் என்ற கணக்கில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாலூட்டும் தாய்மார்களின் மார்பகங்களில் பால் சுரப்பு குறைவது தடைப்படும், மாறாக பால் உற்பத்தி கட்டுப்படும்.
இதையும் படிங்க: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள்.. தாய்மார்களே கண்டிப்பா படிங்க..!!