குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பது எப்படி?
1. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் அடங்கிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
2. நொறுக்கு தீனிகள் சர்க்கரை பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. அதுபோல குழந்தையை குறைந்தது 60 நிமிடங்கள் ஆவது கண்டிப்பாக உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக விளையாடுதல் ஓடுதல் குதித்தல் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.
4. வீடியோ கேம்கள், அதிக நேரம் டிவி மற்றும் மொபைல் பார்ப்பது ஆகியவற்றில் குறைந்த நேரத்தை செலவிடுமாறு குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.
5. உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தை பின்பற்றினால் குழந்தைகளின் உடல் பருமனை சுலபமாக தடுக்க முடியும். அதுபோல அவ்வப்போது குழந்தைகளின் எடையை பரிசோதித்து, ஏதுனை பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்