நம்மில் பலரும் காலை எழுந்த உடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். காபி குடிப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக பல ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. சில ஆய்வுகள் இது நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. நாள்பட்ட நோய்களை தடுக்கவும் காபி உதவுகிறது.. ஆனால் காபி குடிக்கும் போது சில காரணிகளை கருத்தில் கொள்வது அவசியம்.
மிதமான அளவில் காபி குடித்ஹால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2 முதல் 5 கப் காபி உங்கள் ஆரம்பகால மரணம், டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், கல்லீரல், எண்டோமெட்ரியல் புற்றுநோய்கள், பார்கின்சன் நோய் மற்றும் மனச்சோர்வை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், 5 கப்களுக்கு மேல் உட்கொள்வது கவலை, மனச்சோர்வு, அமைதியின்மை, குமட்டல் மற்றும் பிற பக்க விளைவுகள் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.