Mineral Water: மினரல் வாட்டரை சூடு பண்ணி குடிக்கிறீங்களா? நல்லதா? கெட்டதா? அறிவியல் சொல்வது என்ன?

Published : Jul 30, 2026, 02:32 PM IST

Mineral Water: நீங்கள் மினரல் வாட்டரை சூடு பண்ணி குடிக்கிறீங்களா? இது உடம்புக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து அறிவியல, மருத்துவ நிபுணர்கள் சொல்லும் காரணம் குறித்து செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
மினரல் வாட்டரை சூடு பண்ணி குடிக்கலாமா?

மினரல் வாட்டரைச் சூடு செய்து குடிப்பது நன்மையா அல்லது தீமையா என்பதில் பலருக்கும் ஐயம் உள்ளது. இது நபரின் உடல்நிலை, மினரல் வாட்டரின் வகை மற்றும் அதனைச் சூடுபடுத்தும் முறை ஆகிய பல காரணிகளைப் பொறுத்தது.

கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதால், இது பாதுகாப்பான தண்ணீராகக் கருதப்படுகிறது. இருப்பினும், இதனைச் சூடுபடுத்தும்போது சில நன்மைகள் கிடைத்தாலும், சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: Gas Burner Cleaning: கேஸ் பர்னர் கறுப்பா இருக்கா? தீ சரியா எரியலையா? 5 சிம்பிள் டிப்ஸ் இதோ!

24
மினரல் வாட்டரைச் சூடு செய்து குடிப்பதால் என்ன நன்மைகள்?

செரிமானம் சீராகும்: ஆயுர்வேத மருத்துவத்தின்படி, வெதுவெதுப்பான நீர் செரிமான மண்டலத்தைத் தூண்டும். காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால், செரிமானம் சீராகும்; மலச்சிக்கல் குறையும்; உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறும்.

உடலுக்கு இதம் அளிக்கும்: இந்த நன்மைகள் மினரல் வாட்டரைச் சூடுபடுத்திக் குடிக்கும்போதும் கிடைக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் சளி மற்றும் தொண்டை வலி இருக்கும்போது வெந்நீர் குடிப்பது இதமாக இருக்கும்.

இரத்த ஓட்டம் மேம்படும்: மிதமான சூட்டில் நீரைக் குடிப்பது உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது.

கவனிக்க வேண்டிய பாதகங்கள்

மினரல் வாட்டரைச் சூடுபடுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன.  அவற்றை கீழே பார்ப்போம்.

தாதுக்களின் இழப்பு: தண்ணீரை அதிகளவில் சூடுபடுத்தும்போது, அதில் உள்ள முக்கியமான தாதுக்கள் தங்கள் இயல்புத் தன்மையை இழக்கக்கூடும்.

ஆக்ஸிஜன் அளவு குறைதல்: தண்ணீரை அதிக நேரம் கொதிக்க வைத்தால், அதில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறையும்.

சமநிலை மாற்றம்: தாதுக்களின் சமநிலை மாற வாய்ப்புள்ளது. இதனால், தாதுக்களின் மூலம் உடலுக்குச் சத்துகள் கிடைக்கும் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்.

இதையும் படிங்க: Gold: கம்மி விலைக்கு தங்கம் கிடைக்கும் டாப் 10 நகரங்கள்.. தமிழ்நாட்டின் 2 இடங்கள் லிஸ்ட்டில்!

34
பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மினரல் வாட்டரைச் சூடுபடுத்த விரும்பினால், பின்வரும் நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்:

பாத்திரத்தின் தேர்வு: துருப்பிடிக்காத எஃகு (Steel) பாத்திரத்தில் தண்ணீரைச் சூடுபடுத்த வேண்டும்.

வெப்ப நிலை: தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் கொதிக்க வைக்காமல், வெதுவெதுப்பான நிலைக்கு மட்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் தாதுக்களின் இழப்பு குறைவாக இருக்கும்.

தேவைக்கேற்பப் பயன்படுத்துதல்: தினமும் சூடுபடுத்திக் குடிப்பதைக் காட்டிலும், தேவைப்படும் நேரங்களில் மட்டும் இவ்வாறு செய்வது நல்லது.

44
யார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்?

வெந்நீர் அனைவருக்கும் உகந்ததாக இருக்காது:. வாயுத் தொல்லை (Gas problem), வயிற்றுப்புண் (Ulcer) போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் வெந்நீர் குடித்தால், அது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அதேபோல, குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் நீரின் சூடான அளவில் கவனம் தேவை. அதிகச் சூடான நீர் வாய் மற்றும் தொண்டைப் பகுதியைப் பாதிக்க வாய்ப்புள்ளது.

மினரல் வாட்டரைச் சரியான முறையில், சரியான வெப்பநிலையில், தேவைக்கு ஏற்பக் குடித்தால் நன்மைகளைப் பெற முடியும். ஆனால், தண்ணீரை அதிக நேரம் கொதிக்க வைப்பதோ, உடல்நிலையைக் கவனிக்காமல் குடிப்படோ ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories