வாக்கிங் முடித்து வந்தவுடன் குளிக்கலாமா? கூடாதா?
நடைப்பயிற்சி முடித்தவுடன் உடல் வெப்பம் குறையும் வரை காத்திருந்து குளிக்கவும். உடனடியாக குளித்தால் தலைசுற்றல், சோர்வு ஏற்படலாம். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
நடைப்பயிற்சி முடித்தவுடன் உடல் வெப்பம் குறையும் வரை காத்திருந்து குளிக்கவும். உடனடியாக குளித்தால் தலைசுற்றல், சோர்வு ஏற்படலாம். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
உடல் வெப்பம்:
வெயிலில் நடைப்பயிற்சி சென்று திரும்பிய பிறகு உடல் வெப்பம் அதிகரிக்கும். இந்நிலையில் வாக்கிங் முடிந்தவுடன் குளிக்கலாமா என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றும். சிலர் உடனடியாக குளித்துவிட விரும்புவார்கள், ஆனால் அதைச் செய்வதற்கு முன்னர் சில விஷயங்களை தெரிந்துகொள்வது முக்கியம்.
வாக்கிங் முடிந்தவுடன்...
வாக்கிங் முடிந்தவுடன் குளிக்கலாம். ஆனால் அதில் ஒரு முக்கியமான விஷயம், உடல் வெப்பம் குறைந்த பிறகே குளிக்க வேண்டும். ஏன் உடனே குளிக்கக்கூடாது? நாம் நடைப்பயிற்சி (Walking) முடித்தவுடன் உடல் வெப்பம் (Body temperature) அதிகமாக இருக்கும். அந்த நிலைமையில் திடீரென குளிர்ந்த நீரால் குளிக்கும்போது, இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படலாம்.
குளிர்ந்த நீர் கூடாது:
உடல் வெப்பமாக இருக்கும்போது குளிர்ந்த நீரில் குளித்தால், தலைசுற்றல், சோர்வு அல்லது சில நேரங்களில் உடல் வலியும் ஏற்படலாம். அப்படியானால் வாக்கிங் சென்ற பிறகு எப்போது குளிப்பது சரியாக இருக்கும்? வாக்கிங் முடிந்து 5-10 நிமிடம் நிழலில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுக்கவும்.
100 இந்தியர்களை வேவு பார்த்த பெகாசஸ் ஸ்பைவேர்! அதிர வைக்கும் புதிய அப்டேட்!
வெதுவெதுப்பான நீர்:
ஓய்வுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கலாம். இது உடலை உள்ளிருந்து குளிர்ச்சியடைய செய்யும். அதன் பிறகு லேசாகக் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் குளிக்கலாம். சோப்பு, அலோவேரா (Aloe vera) அடங்கிய பாடி வாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். குளிக்கும்போது கழுத்து, காது, கால்கள் போன்ற பகுதிகளை மெதுவாகத் தேய்த்துக் குளிக்கவும்.
சிறிது நேர ஓய்வு தேவை:
சுருக்கமாகச் சொன்னால், வாக்கிங் முடிந்ததும் உடனடியாகக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, உடலில் உஷ்ணம் தணிந்த பின்னர் குளிக்கலாம்.