
அனைவரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் அலாதி பிரியம். உருளைக்கிழங்கில் எந்த மாதிரியான ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.
பொதுவாக உருளைக்கிழங்கில் கூட்டு, பொரியல், வெரைட்டி ரைஸ், மசாலா , கறி ஆகியவற்றை செய்வார்கள். இது தவிர, உருளைக்கிழங்கில் சிப்ஸ், போண்டா போன்ற ஸ்னாக்ஸ் வகைகளையும் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் பயன்களும் :
உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதுபோல இதில் பிற காய்கறிகளை காட்டிலும் குறைந்த கலோரிகள் உள்ளது. உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் கிடைக்கும். அதுபோல இதை பொறித்து, வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக வேகவைத்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
வயிற்றுப்புண், குடல் கோளாறு, வயிற்று கோளாறு, இறப்பை கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு அருமருந்தாகும்.
உருளைக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இதய நோயாளிகள் மற்றும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. உருளைக்கிழங்கில் இருக்கும் மாவுச்சத்து அடி வயிறு, இரைப்பைகளில் உள்ள குழாய் வீங்குவதை தவிர்க்க உதவுகிறது. மற்றும் உடலில் நச்சு நீர் தேங்குவதையும் முன்கூட்டியே தடுக்கும்.
நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கவலைப்பட்டால் உருளைக்கிழங்கை உங்களது உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரதம் குறைவாகவும் உள்ளது.
அதுபோல உருளைக்கிழங்கு பேஸ்ட்டை தேனுடன் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால் சருமம் பளபளக்கும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் குணமாகும்.
யார் சாப்பிட கூடாது : நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் உருளைக்கிழங்கில் இருந்து விலகி இருப்பது நல்லது.
இதையும் படிங்க: குண்டாகி விடுவோம் என்ற பயத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடாம இருக்கீங்களா? அப்ப இந்த வழியில் ட்ரை பண்ணுங்க..!!
அந்தவகையில், சிலரது வீடுகளில் உருளைக்கிழங்கை அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்திருப்பார்கள். நீண்ட நாள் இருக்கும் உருளைக்கிழங்கில் முளைவிட்டு விடும் மற்றும் பச்சையாகவும் மாறிவிடும். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடலாமா என்ற சந்தேகம் இன்றும் பலருக்கும் உண்டு.
சிலர் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாது என்று சொல்லுகின்றனர். இன்னும் சிலரோ முளைவிடுவது இயற்கையானது. எனவே அதை சமைத்து சாப்பிடுவதால் ஒன்றுமாகாது என்று சொல்லுகின்றனர். எனவே, இதில் எது உண்மை என்று ஆய்வுகள் அடிப்படையில் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வேக வைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? புற்றுநோய் வரலாம்.. ஜாக்கிரதை!
உருளைக்கிழங்கில் கிளைக்கோ ஆல்காய்டு என்ற வேதியல் காணப்படுகின்றது. இது குறைவான அளவில் இருந்தால் மனிதனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதுவே முளைவிட்ட உருளைக்கிழங்கில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை சாப்பிடுவது ஆபத்து. முளைவிட்டு உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாந்தி வயிற்றுப்போக்கு வயிறு வலி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் வரும்.
சில சமயங்களில் குழந்தை பிறப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல கர்ப்பிணிகள் முளைவிட்ட உருளைக்கிழங்கை சாப்பிடவே கூடாது. முளைவிட்ட உருளைக்கிழங்கு மட்டுமின்றி பச்சை நிற உருளைக்கிழங்கையும் சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
எந்த மாதிரியான உருளைக்கிழங்குகளை தவிர்க்க வேண்டும்?
சுருக்கம் அடைந்த உருளைக்கிழங்கு, நாட்களாகியும் சமைக்காமல் விட்டதால் முளைத்த உருளைக்கிழங்கு, பச்சையாக மாறிய உருளைக்கிழங்கு போன்றவற்றை சமைத்து கொள்வது உடலுக்கு தீங்குகளை உண்டாக்கும்.