
சிறிது நேரம் உடற்பயிற்சி கூட செய்ய முடியாதா அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் எப்போதுமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதுவும் குறிப்பாக கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தபடியே வேலை செய்கிறார்கள். வேலை செய்து முடிந்த பிறகு கூட சோபாவில் அமர்ந்து மணி கணக்கில் டிவி, மொபைல் பார்த்து தங்களது நாட்களை கழிக்கிறார்கள்.
இப்படி மோசமான வாழ்க்கை முறையால் பலருக்கு பலவிதமான நோய்கள் தாக்குகிறது. ஆனால் அந்த சமயத்தில் கூட உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று கூட யாருக்கும் தோன்றுவதில்லை. இன்னும் சிலருக்கோ தங்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இப்படி எந்தவிதமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்கள் தினமும் நடைபயிற்சியாவது செய்ய வேண்டும்.
உடற்பயிற்சிகளில் மிகவும் எளிமையான பயிற்சி எதுவென்றால் அது நடைபயிற்சி தான். நாம் தினமும் காலை சிறிது நேரம் நடை பயிற்சி செய்தால் அது உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்கும். ஆனால் வயதிற்கு ஏற்றார் போல நடப்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: தினமும் காலை வாக்கிங் போறீங்களா? இந்த தவறை செய்யாதீங்க.. இல்லையெனில் முழங்கால் டேமேஜ் ஆகலாம்!
ஒரு கூற்றுப்படி, நாம் அனைவரும் ஒரு நாளைக்கு 8 கிலோமீட்டர் வரை நடக்க வேண்டுமாம். அதற்கென 8 கிலோமீட்டர் வரை தினமும் வாக்கிங் செல்ல வேண்டும் என்றில்லை. நாம் அனைவரும் தினமும் காலை எழுவது முதல் இரவு தூங்க செல்வது வரை, இந்த இடைப்பட்ட நேரங்களில் நாம் நடப்பது தான் 8 கிலோமீட்டராக இருக்க வேண்டும் என்கின்றனர்.
இதையும் படிங்க: தினமும் காலையில எவ்வளவு நேரம் ஜாக்கிங் பண்ணனும் தெரியுமா..?
ஆனால், இதுவும் ஆரோக்கியத்தை மேம்படுத்த போதாது என்பதால், தினமும் 30 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதுவும் சுறுசுறுப்பாக. இத்தகைய சூழ்நிலையில் எந்த வயதினர் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
ஆய்வு ஒன்றின்படி, நீங்கள் 60 வயதிற்குட்பட்ட நபர் என்றால் ஒரு நாளைக்கு 8000 முதல் 10 ஆயிரம் வரை ஸ்டெப்கள் நடக்க வேண்டுமாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு 6000 முதல் 8000 வரை ஸ்டெப்கள் நடக்க வேண்டுமாம். இப்படி நடை பயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லுகின்றனர். அதுபோல 6 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்களாவது கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒருவேளை உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் விளையாடலாம். மேலும் 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ஸ்டெப்கள் நடக்க வேண்டுமாம்.
முக்கிய குறிப்பு :
தினமும் காலை அல்லது மாலை நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்வது ரொம்பவே நல்லதாம். அதுபோல வயதானவர்களுக்கு மேலே சொன்னபடி ஸ்டெப்கள் புரியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் நீங்கள் தினமும் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் வரை மட்டுமே நடந்தால் போதும். ஒரே நேரத்தில் செய்யாமல் படிப்படியாக நடக்கும் தூரத்தை அதிகரிக்கவும் நாம் தினமும் நடைபயிற்சி செய்தால் நம் உடல் மட்டுமின்றி மனமும் ஆரோக்கியமாக இருக்கும்