
டீ குடித்துக் கொண்டே சிகரெட் பிடிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. இந்தக் காம்பினேஷன் உங்க டென்ஷனையும், டயர்ட்னஸையும் குறைந்தாலும், உங்க உடல்நலத்தைக் கெடுத்துடும். டீயும் சிகரெட்டும் சேர்ந்து குடிப்பதால் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிகரெட்டும் டீயும்
ஒரு சிகரெட்டில் 6-ல் இருந்து 12 மி.கி. நிகோடின் இருக்கிறது. சிகரெட் பிடிக்காதவர்களை காட்டிலும் சிகரெட் பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வர 2-3 மடங்கு வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.. சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துட்டு போகும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால இதயத்திற்கு சுத்தமான ரத்தம் போகாது. மாரடைப்பு வர வாய்ப்பும் அதிகமாகிறது.
டீயில் பாலிபினால்கள் என்று கூறப்படும் இயற்கையான சேர்மங்கள் இருக்கு. இது இதயத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால் டீயில் பால் கலப்பதால் இதோட நல்ல குணங்கள் குறைய தொடங்குகிறது. அதாவது, பாலில் இருக்கும் புரதம் டீயில இருக்கிற பாலிபினால்களோட தன்மையை குறைத்துவிடும். இதனால டீ அதிகமா குடித்தால், இதயத்துடிப்பு அதிகமாகும். ரத்த அழுத்தமும் அதிகமாகும். இந்த இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
டீ குடித்துக்கொண்டே சிகரெட் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்.
டீ குடித்துக்கொண்டே சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வர 30 சதவீதம் வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆய்வுல தெரிய வந்துள்ளது. டீ யில் இருக்கும் நச்சுப் பொருட்கள் சிகரெட் புகையோட சேர்ந்து புற்றுநோய் மாதிரியான ஆபத்தான நோய்களை உண்டாக்குகிறது. அதனால எந்த சூழ்நிலையிலும் டீ குடித்துக்கொண்டே சிகரெட் பிடிக்கக் கூடாது.
புற்றுநோய் : சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். குறிப்பாக வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். டீ உடன் சேர்த்து சிகரெட் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். டீ உங்கள் உடம்பில் இருக்கும் செல்களைத் தூண்டும். சிகரெட்டில் இருக்கும் நச்சுப் பொருட்கள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
டீ, சிகரெட் காம்பினேஷன் உங்க செரிமான அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இது உங்க உணவுக்குழாய், வயித்துல அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அசிடிட்டி, வாயுத் தொல்லை மாதிரியான செரிமானப் பிரச்சினைகள் வரும்.
மன அழுத்தம்: சிகரெட் பிடிப்பவர்களு சிகரெட் பிடிக்கும் போது ரிலாக்ஸா இருக்க மாதிரி இருக்கும். ஆனால் அதன்பின்னர் மன அழுத்தமும் டென்ஷனும் அதிகமாகும். டீயில் இருக்கும் கேஃபைன் காஃபைன் தூக்கமின்யை ஏற்படுத்தும். இதனால் மன ஆரோக்கியம் மேலும் மோசமாகும்.
பற்கள், வாய் ஆரோக்கியத்தில் பாதிப்பு: டீ, சிகரெட் புகையில் இருக்கும் டானின்கள் பற்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். குறிப்பாக உங்க வெள்ளைப் பற்களைப் பழுப்பு, மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிடும். பற்களோட பலத்தைக் குறைக்கும். சிகரெட் பிடிப்பதால் வாயில இருந்து துர்நாற்றம் வரும். இது வாய்ப் புற்றுநோய் வர வாய்ப்பையும் அதிகரிக்கும்.
டீ குடித்து விட்டு சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது.?
உங்களுக்கு டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை படிப்படியாக குறைத்து பின்னர் முழுதாக நிறுத்தலாம். டீ குடிப்பதற்கு பதிலாக வெந்நீர் அல்லது ஹெர்பல் டீ குடிக்கலாம்.. சிகரெட் பழக்கத்தை விட முடியவில்லை என்றால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.