
அனைவருக்கும் பிடித்த பழங்களில் மாதுளையும் ஒன்று. பலரும் மாதுளை பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தினமும் ஒரு சின்ன கப் மாதுளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? ஒரு மாதம் தொடர்ந்து மாதுளை சாப்பிட்டால் நம் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும், நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதுளையில் இருக்கும் சத்துக்கள்
1.கலோரிகள் 72
2.கொழுப்பு 1 கிராம்
3.நிறைவுற்ற கொழுப்பு 0.1கிராம்
4.கார்போஹைட்ரேட்டுகள் 16கிராம்
5.சோடியம் 2.6மில்லி கிராம்
6.சர்க்கரை 11.9கிராம்
7.நார்ச்சத்து 3.48கிராம்
8.புரதம் 45 கிராம்
9.பொட்டாசியம் 205 மில்லி கிராம்
ரத்த அழுத்தம் குறையும்
தினமும் மாதுளை சாப்பிடுவதால், ரத்த அழுத்த பிரச்சனை வராது. உங்களுக்கு ரத்த அழுத்தம், ஹைப்பர் டென்ஷன் பிரச்சனைகள் இருந்தால் தினமும் இந்த மாதுளை விதைகளை சாப்பிட்டால் போதும். மாதுளை ஜூஸ் குடிச்சாலும் ஹைப்பர் டென்ஷன் குறையுமாம்.
மாதுளையால் தொற்றுகள் குறையும்
மாதுளை பழம சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து குறைவு. எனவே தினமும் மாதுளை சாப்பிடுவதால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.
ஞாபக சக்தி அதிகரிக்கும் .
தினமும் ஒரு சின்ன கப் மாதுளைபழம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம். தொடர்ந்து நான்கு வாரங்கள் தொடர்ந்து இந்த விதைகளை சாப்பிட்டாலோ, அல்லது ஜூஸ் குடித்தாலோ புத்தி கூர்மை அதிகரிக்குமாம். மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை
மாதுளை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது என்றும் மாதுளை ஜூஸ் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாகவும் சில ஆய்வுகள் காட்டுகின்றன. பொதுவாக கெட்ட கொழுப்பு தமனிகளில் படிந்துவிடும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
மறுபுறம் நல்ல கொழுப்பு, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கல்லீரலுக்கு கொண்டு சென்று உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. கெட்ட கொழுப்பை குறைப்பதிலும், நல்ல கொழுப்பை அதிகரிப்பதிலும் உதவுவதன் மூலம், மாதுளைகள் இதய நோய்கள் அல்லது இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
புற்றுநோய் அறிகுறிகளைக் குறைக்கும் மாதுளை..
எந்த உணவும் புற்றுநோயை முழுமையாகத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியாது என்றாலும் மாதுளை சாறு, பழம் புரோஸ்டேட் புற்றுநோய் செல்கள், அத்துடன் மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நல்ல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கியமாக மாதுளை தோல் புற்றுநோய் வராலம் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு உதவும் மாதுளை
ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் சிறுநீரக கற்களுக்கு ஒரு ஆபத்து காரணி. மாதுளை பழச்சாறு, அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், அழற்சி எதிர்ப்பு விளைவுகளுடன், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.