Bullet Coffee : நன்மைகளை அள்ளித் தரும் 'புல்லட் காபி' பத்தி தெரியுமா? தெரிஞ்சா சாதாரண காபி குடிக்கவே மாட்டீங்க!!

Published : Aug 02, 2025, 09:02 AM ISTUpdated : Aug 02, 2025, 09:10 AM IST

புல்லட் காபி அல்லது புல்லட் ப்ரூப் காபி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரக் கூடிய பானம்.

PREV
15
Bulletproof Coffee Health Benefits

அமெரிக்காவை தொழிலதிபர் மற்றும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே முதல்முதலாக இந்த காபியை தயாரித்தார். இதன் சுவையும், ஆரோக்கியமும் அவருக்கு பிடித்துப் போகவே உலகிற்கும் அறிமுகப்படுத்தினார். புல்லட் காபி அல்லது புல்லட் ப்ரூப் காபி உடலுக்கு பல்வேறு வகையில் உதவுகிறது.

25
புல்லட் காபி

காலையில் சர்க்கரை கலந்த வழக்கமான காபியை குடிப்பதைக் காட்டிலும் புல்லட் ப்ரூப் காபி பல மடங்கு நன்மைகளைத் தரும். இந்த காபியை தயாரிக்க தண்ணீர், ஒரு ஸ்பூன் நெய், காபித் தூள் ஆகியவை போதும். சர்க்கரை போட வேண்டாம். இதை அருந்தினால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கத் தேவையான ஆற்றல், பசிக் கட்டுப்பாடு, நல்ல மனநிலை ஆகிய நன்மைகளுடன் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இந்தப் பதிவில் புல்லட் காபி நன்மைகள், அதன் தயாரிப்பு முறையை காணலாம்.

35
புல்லட் காபி நன்மைகள்

புல்லட் காபி பொதுவாக கொழுப்பை எரிபொருளாக செயல்படுகிறது. இந்தக் காபி வயிறு நிரம்பிய உணர்வை தருவயால் பசியை கட்டுபடுத்த உதவும். எடையை குறைக்க இந்த காபி உதவக் கூடும். காபியில் சேர்க்கும் நெய்யில் காணப்படும் மீடியம் செயின் ட்ரைக்கிளைசெரைட்ஸ் (MCTs) உடலுக்கு நன்மை செய்கிற கொழுப்பாகும். இது உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். நெய்யில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும்.

45
ஆரோக்கியத்தின் பொக்கிஷம்

புல்லட் காபியில் சேர்க்கும் நெய்யில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும் கொழுப்புகள் உள்ளன. புல்லட் காபி தினமும் குடித்தால் ஹார்மோன் அளவு சமநிலைக்கு வரும். நெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை உள்ளன. இந்த வைட்டமின்கள் எலும்புகள், முடி, சரும ஆரோக்கியத்திற்கு உதவும். நோயெதிர்ப்பு மண்டல மேம்பாட்டுக்கு உதவும். செரிமானம் மேம்பட உதவுகிறது.

55
புல்லட் காபி செய்முறை

ஏதேனும் காபித்தூள் ஒன்றரை டீஸ்பூன், 1 கப் தண்ணீர், நெய்யின் அளவு தேவையை பொறுத்து எடுக்கவும். அதாவது சுவையை அதிகமாக்க 2 ஸ்பூன், எடையை குறைக்க நினைத்தால் 1 ஸ்பூன் என மாற்றிக் கொள்ளலாம். வெந்நீரில் காபித்தூளைப் போட்டு 3 நிமிடங்கள் மூடி வையுங்கள். பின் நெய் சேர்த்து கொள்ளுங்கள். இதை இறக்கி நன்கு கலக்கி குடிக்கலாம். உங்கள் வீட்டில் பிளெண்டர் இருந்தால் ஒருமுறை அடித்துக் குடிக்கலாம். நீங்கள் விரும்பினால் பட்டைப்பொடி, இந்துப்பு போடலாம். சூடு ஆறும் முன் குடிக்க வேண்டும். கண்டிப்பாக சர்க்கரையை போடக்கூடாது.

Read more Photos on
click me!

Recommended Stories