bollywood superstar: என்ன தான் பண்ணுவாரு? 57 வயசிலும் சல்மான் கான் பிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

First Published Dec 28, 2022, 11:50 AM IST

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் தனது 57வது பிறந்த நாளை டிசம்பர் 27 அன்று கொண்டாடினார். இத்தனை வயதான போதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் சல்மான் கான் திகழுவதன் ரகசியம் குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

இந்தி திரையுலகில் சல்மானுக்கு தனி அடையாளம் உண்டு. இவருக்கு இந்திய அளவில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த சல்மான் கான், ஆரோக்கியத்தில் மிளிர பின்பற்றும் வழிமுறைகளை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிட்னஸுக்கு டயட் ப்ளான் 

உறுதியான உடல், கம்பீரமான தோற்றமளிக்கும் சல்மான் கானின் ஆரோக்கியத்தில் உணவும், அவர் அருந்தும் பானங்களும் முக்கிய காரணம். நாள் முழுவதும் வேலை செய்ய அவருக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால் காலை உணவுக்கு, அவர் புரதம் மிகுந்த முட்டையின் வெள்ளைக்கரு, குறைந்த கொழுப்புள்ள பால் எடுத்துக்கொள்கிறார். 

விருப்ப உணவு

தன்னை ஒரு உணவு பிரியர் என அடையாளப்படுத்தும் சல்மான் கான், நேர்காணல்களில் அதை ஒப்பு கொள்ளவும் செய்திருக்கிறார். இந்திய உணவுகளும், இத்தாலிய உணவுகளும் அவருக்கு விருப்பமானவைகள். அதிக இனிப்பு சேர்ந்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார். 

இதையும் படிங்க; Beauty: கையில் சுருக்கம் வந்து வயசான மாதிரி தெரியுதா? இளமையா தெரிய இதைப் பண்ணுங்க!

ஆரோக்கியத்தின் ரகசியம் 

சல்மான் கான் தனது உடலின் வளர்சிதை மாற்றத்தினை (metabolism) நன்றாக வைத்திருக்க ஐந்து முதல் ஆறு தடவை முறையே சீரான இடைவெளியில் உணவை எடுத்துக் கொள்கிறார். மதிய உணவாக ரொட்டியும் காய்கறிகளை ப்ரை செய்தும் உண்கிறார். கூடவே சாலட் எடுக்கிறார். சல்மான் எப்பொழுதும் தனது தட்டை ஆரோக்கியமான உணவுகளால் மட்டுமே நிரப்பிக் கொள்கிறார். மாலை நேர சிற்றுண்டிகளில் பாதாம் சாப்பிடுவது அவருக்கு பிடிக்குமாம். சில நேரங்களில் அவர் வேறு ஏதாவது ஆரோக்கியமான தின்பண்டங்களையும் உண்ண தவறுவதில்லையாம்.

இதையும் படிங்க; Skin care: முகத்தில் வந்த கரும்புள்ளிகளால் வருத்தமா..? விரைவில் மறைய இதோ வழிகள்!

எனர்ஜி சீக்ரெட்

இரவு உணவிற்கு 2 முட்டை, மீன் அல்லது சிக்கன் மற்றும் சூப் ஆகியவற்றை எடுத்துக்கொள்வார். இது தவிர, சல்மான் தனது உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் முறையே ஒரு கிண்ணத்தில் பழங்கள் அல்லது புரோட்டீன் ஷேக்குகளை எடுத்துக்கொள்கிறார். உடற்பயிற்சிக்கு பிறகு ஆற்றலை அதிகரிக்க ஓட்ஸ் அல்லது புரோட்டீன் பார்ஸ் எடுத்து கொள்வாராம். இந்த டிப்ஸை நீங்களும் பின்பற்றி ஆரோக்கியத்தில் மேம்படுங்கள். 

click me!