பொதுவாக வீட்டு உணவை சாப்பிடுபவர்களுக்கு ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற ஆர்வம் இருக்கும். சில ஹோட்டல்களில் சிறப்பு உணவு கிடைக்கிறது என்று தேடிச் செல்வார்கள். சிலர் வீட்டில் ஒரே மாதிரியான உணவை சமைத்து சாப்பிட்டு அலுத்துவிட்டது என்று செல்பவர்களும் உண்டு. சிலர் பாருடன் இணைந்த ஹோட்டலுக்கு சென்று மது வகைகளை ருசிப்பார்கள்.
ஆனால், இங்கே உங்களுக்கு நாங்கள் அறிமுகம் செய்ய இருப்பது உலகில் இருக்கும் விசித்திரமான ஹோட்டல்கள் பற்றிதான். தற்போது தீம் அடிப்படையில்தான் ஹோட்டல்கள் செயல்படுகின்றன. இளைஞர்களும் அவற்றை விரும்புகின்றனர். சாப்பிடச் செல்கிறார்களோ இல்லையோ அந்த மாதிரியான ஹோட்டல்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கச் செல்கின்றனர்.
ஒரு பொது இடத்தில் ஆடை இல்லாமல் உணவு உண்ணுகின்றனர் என்ற செய்தியை கேட்டால் மிகவும் வினோதமாகத் தானே இருக்கும். ஆனால் லண்டனில் ஒரு உணவகம் உள்ளது. அங்கு மக்கள் தங்கள் ஆடைகளை களைந்து சாப்பிடுகிறார்கள். உலகின் முதல் நிர்வாண உணவகம் 2016 ஆம் ஆண்டு லண்டனில் 'தி பேசிக்' (நிர்வாண உணவகம், லண்டன்) என்ற பெயரில் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உணவகத்தில் (உலகின் மிகவும் வித்தியாசமான உணவகங்கள்) உணவு உண்ண கூடுதல் முன்பதிவு செய்கிறார்கள். இங்கே பணிப்பெண், சமையல்காரர் மற்றும் பொது சமையல்காரர், நிர்வாணமாகவே உணவு சமைக்கின்றனர், பறிமாறுகின்றனர்.
நியோடைமோரி என்றால் ஜப்பான் மொழியில் பெண்ணின் நிர்வாண உடலில் உணவு பரிமாறுவது என்று அர்த்தம். ஜப்பான் நாட்டில் இதுபோன்று பரிமாறப்பட்டு வருகிறது. உடலை சுஷி என்று அழைக்கின்றனர். இந்த முறையிலான ஹோட்டல்கள் ஜப்பானில் 1960ஆம் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் நிர்வாண உடலில் உணவுகள் பரிமாறப்படும். பெண்ணின் உடலைச் சுற்றி அமர்ந்து உணவுகளை சாப்பிடுவார்கள். இந்த மாதிரியான உணவு பரிமாறல் அவமானகரமானது, இழிவானது, கொடூரமானது, பழமையானது என்று உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் ஜப்பான் இதற்கு தடை விதிக்கவில்லை. சமீப காலங்களில் பெண்ணின் உடல் மீது இலையை வைத்து அதில் உணவு பரிமாறுகின்றனர். சீனா இந்த மாதிரியான உணவு பரிமாறலுக்கு தடை விதித்துள்ளது.
கழிப்பறை போன்ற இருக்கையில் அமர்ந்து உணவு அருந்துவது என்று இதுவும் ஒரு தீமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த இருக்கையையும் சேர்த்தே சில ஓட்டல்களில் சாப்பிடலாம். தைவானில் இதுபோன்ற ஹோட்டல்கள் உள்ளன. அங்கு மேஜை, நாற்காலியில் அல்லாமல், கழிப்பறை இருக்கையில் அமர்ந்துதான் உணவு உண்ண வேண்டும். இதுமட்டுமின்றி, இங்கு உணவுகள் மற்றும் பானங்களும் கழிப்பறை இருக்கையிலேயே பரிமாறப்படுகிறது.
சீனாவில் பல விசித்திரமான தீம் அடிப்படையிலான ஹோட்டல்கள் உள்ளன. வித்தியாசமாக சிறைச்சாலை தீம் ஹோட்டல் உள்ளன. சிறை போன்ற அமைப்பை கொண்ட அறைகளில் உணவு வழங்கப்படுகிறது. கைதி மற்றும் சிறைக்காவலர் போன்ற உடை அணிந்து பணியாளர்கள் சிறப்பு உபசரிப்பு வழங்குகிறார்கள், உணவும் பரிமாறுகிறார்கள்.
தைபேயில் கார் தீம் வடிவில் உணவு பரிமாறப்படுகிறது. இதுவும் தைவான் நாட்டில்தான் இருக்கிறது. இந்த ஹோட்டலில் பழைமையான கார்கள் நிறுத்தப்பட்டு, இருக்கைகள் அமைக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்படுகின்றன.