Best Oils for Winter : குளிர்காலத்தில் சிறந்த 'சமையல் எண்ணெய்' எது தெரியுமா? இதை தவறாம பாலோ பண்ணுங்க

Published : Dec 11, 2025, 06:41 PM IST

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
Best Oils for Winter

தற்போது குளிர்காலம் என்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உடலை சூடாக வைத்திருப்பதும் ரொம்பவே முக்கியம். இதற்காக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். இந்த பதிவில் குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

24
கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் வெப்பத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது தவிர சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். ஆனாலும் இந்த எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

34
நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்க உதவுவதாக ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது. இந்த எண்ணெயை குளிர்காலத்தில் சமையலுக்கு பயன்படுத்தினால் குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலி, விறைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும். மேலும் இந்த எண்ணெயில் கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் உள்ளன. அவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும். இது தவிர குளிர்ச்சியால் ஏற்படும் சரும வறட்சியை குறைப்பதில் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

44
கடலை எண்ணெய்

குளிர்காலத்தில் சமையலுக்கு இந்த எண்ணெய் ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இது உடலுக்கு தேவையான சக்தியை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ, புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இந்த எண்ணெயில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கலிகளிலிருந்து பாதுகாக்கும். இருப்பினும் வேர்கடலை ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம்.

மேலே சொன்ன மூன்று எண்ணெயும் குளிர்காலத்தில் சமையலுக்கு பயன்படுத்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories