Powder vs Liquid: வாஷிங் மிஷின்ல துவைக்க எது சிறந்தது? பவுடரை மிஞ்சுமா லிக்குவிட்?!

Published : Dec 11, 2025, 05:59 PM IST

வாஷிங் மெஷினில் லிக்விட் அல்லது பவுடர் பயன்படுத்துவதில் குழப்பமா? உங்கள் மெஷினின் வகைக்கேற்ப எது சிறந்தது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
வாஷிங் மெஷின் வகைகள்

தற்போது சந்தையில் டாப் லோட் (top-load), ஃபிரன்ட் லோட் (front-load) என இரண்டு வகை வாஷிங் மெஷின்கள் உள்ளன. சிறந்த சுத்தம் மற்றும் செயல்திறனுக்கு ஃபிரன்ட் லோட் சிறந்தது. குறைந்த செலவில் எளிதாக பயன்படுத்த டாப் லோட் தேர்வு செய்யலாம்.

25
ஃபிரன்ட் லோட் வாஷிங் மெஷின் (Front-Load Washing Machine)

ஃபிரன்ட் லோட் மெஷின்கள் மெதுவாக துணிகளை சுழற்றி கறைகளை நீக்குகின்றன. இது துணிகளை சேதப்படுத்தாது. குறைந்த நீர் மற்றும் மின்சாரத்தில் இயங்கும். இதன் ஸ்பின் வேகம் அதிகம் என்பதால் துணிகள் விரைவில் உலரும்.

35
டாப் லோட் வாஷிங் மெஷின் (Top-Load Washing Machine)

டாப் லோட் மெஷின்கள் பட்ஜெட் ஃப்ரெண்ட்லி. வாஷிங் சைக்கிளின் நடுவிலும் துணிகளைச் சேர்க்கலாம். ஃபிரன்ட் லோட் மெஷினில் இந்த வசதி இல்லை. மேலும், பூஞ்சை பிடிக்கும் அபாயமும் இதில் குறைவு.

45
Liquid vs. Powder Detergent – உங்கள் மெஷினுக்கு எது நல்லது?

மெஷினின் வகையைப் பொறுத்து டிடர்ஜென்ட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஃபிரன்ட் லோடுக்கு லிக்விட் அல்லது குறைந்த நுரை கொண்ட பவுடர் சிறந்தது. டாப் லோடுக்கு எளிதில் கரையும் பவுடர் டிடர்ஜென்ட் சிறந்தது.

55
சுற்றுச்சூழலுக்கு உகந்த டிடர்ஜென்ட்கள்

தற்போது சந்தையில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத கிரீன் டிடர்ஜென்ட்கள் கிடைக்கின்றன. இவை ஃபிரன்ட் லோட் மற்றும் டாப் லோட் மெஷின்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories