Vessel Washing Mistakes : இல்லத்தரசிகளே! பாத்திரம் கழுவுறப்ப இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. இனி கவனமா இருங்க

Published : Dec 11, 2025, 04:54 PM IST

பாத்திரம் கழுவும் போது சில தவறுகளை செய்யக்கூடாது. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
Vessel Washing Mistakes

பாத்திரங்களை கழுவுவதுல தவறா? அதுல என்னங்க தவறு இருக்க போகுது. எல்லாரும் கழுவுறது போல தான் கழுவுகிறோம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் பத்திரங்கள் கழுவும் போது நாம் தெரியாமல் சில தவறுகள் செய்துவிடுகிறோம். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

25
நான்ஸ்டிக் பாத்திரத்தை கழுவும் போது இந்த தப்ப செய்யாதீங்க!

நான்ஸ்டிக் பாத்திரங்களை கழுவும் போது ஸ்க்ரப்பர்கள் பயன்படுத்தக்கூடாது. அது பாத்திரத்தில் கீறலை உண்டாக்கும். மேலும் நான்ஸ்டிக் கோட்டின் சேதமடைந்து அவற்றிலிருந்து மோசமான ரசாயனங்கள் வெளிவரும். அவற்றில் சமைத்த உணவு உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

35
வெயிலில் காயவைக்கவும் :

பாத்திரங்களை கழுவிய உடனே வெயிலில் காய வைப்பது பயன்படுத்துங்கள். இல்லையெனில் அதில் பூஞ்சை தொற்றுகள் எளிதாக வந்துவிடும்.

45
சுடுதண்ணீரில் கழுவுங்கள் :

பாத்திரங்களை எப்போதும் போல சோப்பு போட்டு தண்ணீரில் கழுவிய பிறகு கடைசியாக சுடுதண்ணீரிலும் ஒரு முறை அலச வேண்டும். இப்படி செய்தால் பாத்திரத்தில் ஒட்டி இருக்கும் கிருமிகள், பாக்டீரியா தொற்றுகள் நீங்கும்.

55
இந்த தவறுகளையும் செய்யாதீங்க!

- சிலர் இரவில் பாத்திரங்களை சிங்கில் போட்டுவிட்டு மறுநாள் காலையில் தான் கழுவுவார்கள். ஆனால் இப்படி செய்யாதீங்க. அழுக்கான பாத்திரங்களை அவ்வப்போது உடனே சுத்தம் செய்து விடுவது தான் நல்லது. இல்லையென்றால் பாத்திரங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், துர்நாற்றத்தையும் உண்டாக்கும்.

- அதுபோல சிங்கில் பாத்திரத்தை போட்டு மொத்தமாக சிலர் கழுவுவார்கள். இந்த தவறை செய்யாதீங்க அவ்வப்போது சிங்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவி விடுங்கள்.

இனி பாத்திரங்கள் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க. உங்கள் நேரம் மிச்சமாகும். தண்ணீரும் அதிகமாக செலவாகாது.

Read more Photos on
click me!

Recommended Stories