பற்களில் கறை ஏற்படுவது பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சனை. மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் பற்களில் ஏற்படும் இந்த கறையை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது.
28
பற்களில் கறை ஏற்பட காரணம்
சில தினசரி பழக்கவழக்கங்கள் பற்களில் கறை ஏற்பட காரணமாகின்றன. பற்களில் கறை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.
38
புகையிலை
புகையிலையில் உள்ள நிக்கோட்டின், ஆக்ஸிஜனுடன் சேரும்போது மஞ்சள் நிறமாகி பற்களில் கறையாக மாறும். சிகரெட்டில் உள்ள தார் பற்களின் எனாமலை பாதிக்கும்.
டீயில் உள்ள டானின்கள் பற்களின் எனாமலுடன் இணைந்து மஞ்சள் அல்லது பழுப்பு நிறக் கறைகளை உண்டாக்கும். அதிக டானின் அடர்த்தி கொண்ட டீ பற்களில் கறையை ஏற்படுத்தும்.
58
நீர்ச்சத்து குறைபாடு
தண்ணீர், நிறமிகளையும் உணவுத் துகள்களையும் அகற்றுகிறது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பற்களில் கறை அதிகமாகும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
68
அமிலத்தன்மை கொண்ட உணவுகள்
அமிலத்தன்மை கொண்ட உணவுகளை (சிட்ரஸ், சோடா, தக்காளி) சாப்பிட்ட உடனேயே பல் துலக்குவது, நிறமிகளை மென்மையான எனாமலுக்குள் தள்ளி கறைகளை மோசமாக்கும்.
78
மவுத் வாஷ்
செயற்கை மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது பற்களில் கறையை உண்டாக்கும். எனவே, அத்தகைய மவுத் வாஷ்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
88
சரியாக பல் துலக்காதது
சரியாக பல் துலக்காமல் இருப்பதும், இரவில் பல் துலக்காமல் விடுவதும் பற்களில் கறை ஏற்பட காரணமாகும். எனவே, இரவில் சரியான முறையில் பல் துலக்க வேண்டும்.