வெறும் வயிற்றில் வால்நட் பருப்பு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அடடே..! இவ்வளவு நாள் தெரியாம போச்சே.!

First Published Sep 23, 2022, 11:50 AM IST

Benefits of eating walnuts: தினமும் காலை வெறும் வயிற்றில் வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற பருப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா..? கண்டிப்பாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வால்நட், மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கிய விஷயத்திலும் வேறுபட்டது. இது  மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும். ஆம், இது பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இந்த வால்நட்டை என்னும் அக்ரூட்டை ஊறவைத்து காலையில் வெறும் சாப்பிடுவது இன்னும் கூடுதல் நன்மையைத் தரும். ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க...Sani: தீபாவளி முதல் அள்ளிக்கொடுக்கும் சனியில் நேரடி அருளை பெறப்போகும் ராசிகள்..உங்கள் ராசியும் இதில் இருக்கா.?

இந்த வால்நட் பருப்பில் புரதம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல சத்துக்களும் அதிகம் உள்ளன.குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

 உடல் எடையை குறைக்க உதவும்:

அதிகரித்து வரும் எடையை எந்த வகையிலும் குறைக்க முடியாதவர்கள், தினமும் ஊறவைத்த வால்நட்ஸை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் புரதத்தின் அளவு அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன.
 

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

அஜீரணம், வாயு மற்றும் செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வருவதினால் செரிமான பிரச்சனை சரியாகும். மேலும் வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.  

மேலும் படிக்க...Sani: தீபாவளி முதல் அள்ளிக்கொடுக்கும் சனியில் நேரடி அருளை பெறப்போகும் ராசிகள்..உங்கள் ராசியும் இதில் இருக்கா.?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் 

வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றுகளும் அவ்வளவு எளிதாக தாக்கிவிட முடியாது. மேலும், உடலுக்கு தேவையான ஆற்றல் தருகிறது.

எலும்புகள் வலுவாக இருக்கும்

வால்நட் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும் உலர் பழங்களில் ஒன்றாகும். இதன் மூலம் நமது உடலின் எலும்புகள் வலுவடையும். அதனால்தான் வாதுமை கொட்டை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது. இதில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் எலும்புகளை பலப்படுத்துகிறது.

மேலும் படிக்க...Sani: தீபாவளி முதல் அள்ளிக்கொடுக்கும் சனியில் நேரடி அருளை பெறப்போகும் ராசிகள்..உங்கள் ராசியும் இதில் இருக்கா.?

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்:

நீரிழிவு ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் 2-3 ஊறவைத்த வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கிறது.

click me!