மேலும் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும், கல்லீரலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவி புரிகிறது. இதை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நோய், புற்றுநோய், இருதய பாதிப்பு சார்ந்த நோய் எதுவும் உங்களை அண்டாது. உடல் எடை, நீரிழிவு அளவு, கொலஸ்ட்ரால் அளவு உள்ளிட்டவை கட்டுக்குள் இருக்கும்.
உங்களுடைய ’செக்ஸ் லைஃப்’ சிறக்க பிரபல நடிகர் சொல்லும் சூத்திரங்கள்..!!
ஆப்பிள் சைடர் வினிகரை எப்போதும் முதலில் தண்ணீரில் கலந்து தான் குடிக்க வேண்டும். இதை நேரடியாக குடித்துவிட்டால், ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவில் தான் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்துகொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் அல்லது உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு இதை பருகலாம்.