Kideny: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிட கூடாது..? இதை ஃபாலோ பண்ணுங்க போதும் ..

First Published Aug 12, 2022, 2:30 PM IST

Kideny Stone Problem: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க, கீழே சொன்ன உணவு பொருட்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அவை என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

Kideny Stone Problem:

சமீப காலமாக சிறுநீரக கற்கள் பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக, இப்பிரச்சனையால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் தான் கஷ்டப்படுவார்கள். அதிலும், ஒருவருக்கு சிறுநீரக கல் பிரச்சனை தீவிரமாக இருந்தால், அது முதுகின் பின்புறத்தில் கடுமையான மற்றும் கூர்மையான வலியை சந்திக்க வைக்கும். எனவே, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க...தோசைக்கல்லில் அடி பிடிக்காமல், எண்ணெய் பாட்டிலை பிசுபிசுப்பு இல்லாமல் சுத்தம் செய்ய..நச்சுனு 5 கிச்சன் டிப்ஸ்

Kideny Stone Problem:

சிறுநீரக கல் என்றால் என்ன?

கற்கள் என்பன மிகவும் திண்மை வாய்ந்த படிகங்களாகும். இவை ஒருவருக்கு மரபணுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வரக்கூடும்.

சிறுநீரகங்களுக்குள் உருவாகும் அல்லது சிறுநீர் செல்லும் பாதையில் கால்ஷியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில் இருந்தால் கற்கள் உருவாகி இருக்கின்றன என்று அர்த்தம். அது கடுமையான வலியை உண்டாக்குவதோடு, அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்கத் தூண்டும், சிறுநீரில் இரத்தம் கலந்து வரும், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

எனவே, உங்கள் சிறுநீரகத்தை கற்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

6 foods for monkeypox recovery and strong immunity

சிறுநீரக கல் இருந்தால் என்ன சாப்பிட வேண்டும்?

1. சிறுநீரக கற்களைத் தடுக்க ஒருநாளைக்கு குறைந்தது  8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.சிறுநீரகத்தில் கல் இருந்தால், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

2. தர்பூசணி, திராட்சை போன்ற பழங்களில் ஏராளமான அளவில் நீர்ச்சத்துள்ளது. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது.

Why Some Doctors Warn Against The Raw Food Diet

3. சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையைத் தடுக்கும் தன்மை கொண்டது. எனவே,  ஆரஞ்சு, எலுமிச்சை, மொசாம்பி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

4. முட்டைகோஸ், பாகற்காய், வெண்டைக்காய், பட்டாணி, ஆப்பிள் சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

5. பருப்பு வகை காய்கறிகளை சாப்பிடுவதும் கற்களில் நன்மை பயக்கும். பழங்கள், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காளான், குடை மிளகாய், முளைகட்டிய பயிறு போன்ற மூலிகைகள் கல் உருவாவதைத் தடுக்கின்றன. 

Kideny Stone Problem:

சிறுநீரக கல் என்ன சாப்பிடக்கூடாது?

1. கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருக்கும் உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். சிறுநீரக கற்களைத் தவிர்க்க தக்காளி, ஆப்பிள், கீரை போன்ற அதிக ஆக்சலேட் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கவும். 

2. புரதம் அதிகம் உள்ள உணவுகளான, இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும்.

மேலும் படிக்க...Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் புதிய மாற்றம்..இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியும்..மகிழ்ச்சி பொங்கும்

Kideny Stone Problem:

3. கொழுப்பு அதிகம் சேர்க்கப்பட்ட, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளான சீஸ், தயிர், வெண்ணெய் போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.

4. பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் சோடியம் மற்றும் ஆக்சலேட் அதிக அளவில் உள்ளது. எனவே, இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க...Rahu Peyarchi 2022: ராகுவால் உண்டாகும் புதிய மாற்றம்..இந்த ராசிகள் மீது அருள் மழை பொழியும்..மகிழ்ச்சி பொங்கும்

click me!