
நம்முடைய முன்னோர்கள் காலத்தில் சர்க்கரை நோய் இருந்ததில்லை. ஆனால், இன்றைய காலத்தில் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், சரியான நேரத்தில் சாப்பிடாமல், நேரம் தவறி சாப்பிடுவது இதுபோன்றவை ஆகும்.
இதனால் பலர் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், காலை இரவு உணவில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள், மதிய உணவிலும் கவனம் செலுத்த மறந்துவிடுகிறார்கள். இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் குறிப்பாக, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் ரொம்பவே தவறு.
முக்கியமாக, சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் குடிக்கும் பானம் முதல் உண்ணும் உணவில் வரை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காரணம் சில உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது? போன்ற விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இனிப்பு சாப்பிடக்கூடாது :
பலரும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட விரும்புவார்கள். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். அதுபோல அப்பளமும் சாப்பிட கூடாது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட மாவில் அப்பளம் தயாரிக்கபட்டு, பிறகு எண்ணெயில் நன்கு பொரித்தெடுக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு கேடு. எனவே, சர்க்கரை நோயாளிகள் இனிப்பு மற்றும் அப்பளத்தை மதிய உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
பொறித்த உணவுகள் :
சர்க்கரை நோயாளிகள் மதிய நேரத்தில் பொரித்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடவே கூடாது. காரணம், பொரித்த உணவில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய், உப்பு ஆரோக்கியத்திற்கு கேடு. மேலும், இது ஆரோக்கியமானது அல்ல. இதற்கு பதிலாக நீங்கள் நார்ச்சத்து புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இவை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
இதையும் படிங்க: வேப்பிலைக்கு சர்க்கரை நோயை விரட்டும் தன்மை உண்டா?
குளிர் பானங்கள் :
சர்க்கரை நோயாளிகள் மதிய உணவோடு, குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் குளிர்பானங்களில் செயற்கை இனிப்புகள் அதிகம் சேர்க்கப்படுவதால், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, மதிய வேளையில் குளிர்பானத்தை குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதுபோல, அதிக இனிப்பு உள்ள பழங்களையும் சாப்பிடக்கூடாது உதாரணமாக மாம்பழம் வாழைப்பழம் பலாப்பழம் லிச்சிஸி போன்றவையாகும்.
என்ன சாப்பிடலாம்?
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மதிய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், புரதமும், நார்ச்சத்தும் சம அளவிலும்... கார்போஹைட்ரேட்டுகள் மிதமான எடுத்துக்கொள்ளுங்கள். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
கார்போஹைட்ரேட்டுகள் நன்மை என்றாலும், அது நாம் எடுத்துக் கொள்ளும் உணவே பொறுத்து வேறுபடும். எனவே, இதற்கு நீங்கள் பழுப்பு அரிசி ஓட்ஸ் ஸ்கினோவா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, சரிவிகித உணவை எப்போதும் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
முக்கிய குறிப்பு :
தற்போது நாம் அதிகப்படியான வேலை பொருளு காரணமாக, மதியம் சாப்பிடும் நேரத்தை சரியாக பின்பற்றுவதில்லை. இதுகூட சர்க்கரை வருவதற்கு காரணங்களில் ஒன்றாகும்.
எனவே, நீங்கள் மதியம் சாப்பிடும் நேரம் ஒரே மாதிரியாக தான் இருக்க வேண்டும். அதாவது ஒரு நாள் இரண்டு மணியும், மறுநாள் இரண்டு மணி என்று மாறி மாறி இருக்கக் கூடாது. மதியம் சாப்பிடுவதற்கு என சரியான நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் அதை தினமும் ஃபாலோ பண்ணுங்கள். இது உங்களுக்கு கடினமாக இருந்தாலும் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். அப்போது தான் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் இந்த ஒரு சாக்லேட் கண்டிப்பா சாப்பிடலாம்!! அது என்ன தெரியுமா?