மாதுளை பழம் சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதை தினமும் சிறிதளவாவது சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. இரத்தத்தை சுத்தப்படுத்துவது முதல் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது வரை போன்ற நிறைய நன்மைகளை இது நமக்கு வழங்குகிறது ஆனாலும் இதை சாப்பிடும்போது நாம் சில தவறுகளை செய்கிறோம். அதன் காரணமாக அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பெற முடியாமல் போகிறது. எனவே மாதுளம் பழத்தை சாப்பிடும்போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது? அதை சாப்பிட சிறந்த வழிகள் என்னவென்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
27
பழத்தை தவறான முறையில் வெட்டுதல் :
பொதுவாக பலரும் மாதுளை பழத்தை நடுவில் நேராக வெட்டுகிறார்கள். ஆனால் இப்படி செய்தால் அதில் இருக்கும் சாறு வெளியே வந்து வீணாகிவிடும். எனவே முதலில் மாதுளை பழத்தை முழுவதுமாக லேசாக தட்டி அதன் தோல் பகுதியை மெதுவாகப் பிரித்து சாப்பிடவும்.
37
வெள்ளை தோலை நீக்குதல் :
மாதுளை பழத்தின் தோலை உரித்த பிறகு அதன் மேல் புறத்தில் இருக்கும் மெல்லிய வெள்ளைத் தோல் துவர்ப்பான சுவையில் இருப்பதால் அதை நீக்கிவிடுவோம். ஆனால் அது தவறு. அவை எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை. மேலும் சில நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதில் உள்ளன. ஆகவே அதை அதிக அளவில் சாப்பிடாமல் ஒரு சிறிய அளவில் எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை பெறலாம்.
மாதுளை பழத்தில் உள்ளே இருக்கும் முத்துக்களை தானே சாப்பிடுகிறோம் என்று நினைத்து பலரும் மாதுளை பழத்தின் வெளிப்பகுதியை கழுவுவதே கிடையாது. ஆனால் அப்படி செய்வது தவறு. மாதுளை பழத்தின் வெளிப்புற தோலில் நிறைய பாக்டீரியாக்கள், கிருமிகள் இருக்கும். இது தவிர பூச்சிக்கொல்லி மருந்தும் தெளித்து இருப்பார்கள். எனவே மாதுளை பழத்தை வெட்டுவதற்கு முன் அதை நன்கு கழுவவும்.
57
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது :
மாதுளை பழம் ஆரோக்கியமானது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. ஆமாங்க, மாதுளை பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அதை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே ஒரு நாளைக்கு ஒரு கிண்ணம் சாப்பிடுவதே போதுமானது.
67
தவறான முறையில் சேமித்தல் :
மாதுளை பழத்தை சாப்பிடுவது மட்டுமல்லாமல் அதை சரியான முறையில் சேமிப்பது மட்டுமே அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ஆம், மாதுளை பழம் பிரெஷ்ஷாக்கி இருந்தால் மட்டுமே அதன் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியும். ஒரு வாரம் வரை மாதுளை பழத்தை அறையில் வெப்ப நிலையில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் பிரிட்ஜில் தான் வைக்க வேண்டும். ஆனால் பிரிட்ஜில் அப்படியே வைத்தால் அதில் இருக்கும் நீர்ச்சத்து முழுவதும் உறிஞ்சப்பட்டு விடும். எனவே அதை ஜிப்லாக் பை அல்லது காற்று புகாத டப்பாவில் போட்டு சேமிக்கவும். உரித்த பழத்தை ஒரு கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம்.
77
மருந்துகளுடன் எடுத்துக் கொள்வது :
மாதுளை பழம் சில மருந்துகளுடன் குறிப்பாக இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பிற்கான மருந்துகளுடன் தொடர்புடையது. ஆகவே, நீங்கள் ஏதேனும் உடல் நல பிரச்சனைக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டால் மாதுளை பழத்தை சாப்பிடுவதற்கு முன் ஒரு முறை மருத்துவரை அனுப்புவது நல்லது.