
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியம் என்பது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் சரியான முறையில் செயல்படுவதைக் குறிக்கிறது. இப்படியே நம்முடைய உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு நாம் சாப்பிடும் உணவுகளின் அடிப்படையில் தான் அமைகின்றது.
அந்தவகையில், நாம் அன்றாட உணவில் தினமும் தயிர் சாப்பிடுவது வழக்கம். அதுவும் குறிப்பாக மதிய உணவில் தான் சேர்ப்போம். தயிரில் கால்சித், பொட்டாசியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தயிர் குளிர்ச்சியானது என்பதால் இது உடல் சூட்டைத் தணிக்கும்.
இதையும் படிங்க: தேனை மறந்தும் கூட இதனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. அபாயம்!!
தயிர் நன்மைகள்
- மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் தயிரை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
- தயிரில் இயற்கையாகவே ப்ரோபயோடிக்ஸ் என்ற அமிலம் உள்ளதால் இது குடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
- தலைமுடியில் தயிரை நேரடியாக தலையில் தடவினால் பொடு தொல்லை, தலைமுடி வறட்சி, தொற்று போன்ற பிரச்சினைகள் சரி செய்யப்படும்.
- தயிரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் கிருமிகளை தடுத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறனை வலுப்படுத்தும்.
- தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது இதனால் வீக்கா மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.
இப்படி பல அற்புத நன்மைகள் நிறைந்துள்ள தயிரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
தயிர் &தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
தயிரை போலவே தேனிலும் அதிக அளவு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது. தேன் இயற்கை நமக்கு கொடுத்த ஒரு அற்புதமான அருமருந்தாகும். தேனில் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி வாங்க இப்போது தயிருடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1. தயிரில் புரோட்டின் மற்றும் தேனில் குளுக்கோஸ் அதிக அளவு இருக்கிறது. எனவே இவை இரண்டையும் கலந்து சாப்பிட்டால் உடலானது எப்போதும் ஆற்றல் நிறைந்து இருக்கும்.
2. நீர் மற்றும் தேனில் அதிக அளவு ப்ரோபயாட்டிக் இருப்பதால் இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது தவிர, செரிமான ஆரோக்கிய மேம்படும்.
இதையும் படிங்க: தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 3 பொருட்கள்..!!
3. தயிர் மற்றும் தேனில் அதிக அளவு புரதச்சத்தை இருப்பதால் அவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், அவை எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு ஆரோக்கியமாக இருந்தால் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.
4. தேன் மற்றும் தண்ணீரில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. முக்கியமாக தயிர் மற்றும் தேனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
முக்கிய குறிப்பு :
தேனில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் அவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீரிழிவு நோய் வரும், உடல் எடை கூடும் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இது தவிர சிலருக்கு தேன் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால், அளவோடு சாப்பிடும் வேண்டும்.