
நம் ஆரோக்கியமாக இருக்க நம் அன்றாட உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மீன், இறைச்சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் ஓமேகா 3 கொழுப்பு அமிலம். பொதுவாக இது அதிக அளவில் இறச்சிகள் மற்றும் கடல் உணவுகளில் தான் கிடைக்கும். சைவம் உணவு சாப்பிடுபவர்களால் அவற்றை சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அந்த ஊட்டச்சத்து கிடைக்காமல் போகின்றது.
ஆனால் உண்மையில், ஓமேகா 3 கொழுப்பு அமிலம் சைவத்திலும் இருக்கிறது. பலருக்கு தான் அது பற்றி தெரிவதில்லை. எனவே இப்போது ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சைவ உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
ஓமேகா 3 கொழுப்பு அமிலம்:
ஓமேகா 3 கொழுப்பு அமிலமானது நம் உடலில் இருக்கும் உயிரணுக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் அது தவிர இது உடலுக்கு தேவையான கலோரிகளை வழங்கி உடலை எப்போதும் ஆற்றலாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்கவும், நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கவும், வீக்கத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.
இதுதவிர, மூளை, இதயம், இனப்பெருக்க உறுப்புகள் உட்பட்ட நம்முடைய உடலில் முக்கியமான பாகங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இளமையாக இருக்க உதவும். ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் இதை சேர்ப்பது மிகவும் அவசியம். ஒரு நபர் தனது உணவில் தினமும் 1.2 கிராம் முதல் 1.8 கிராம் வரை ஓமேகா 3 கொழுப்பு அமிலம் சேர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள சைவ உணவுகள்:
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் அதிக அளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது தவிர, இதில் மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆளிவிதையானது கொலஸ்ட்ராலை எதிர்த்து போராடவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீரேடிக்கலிலிருந்து செல்களை பாதுகாக்கவும், குறைக்கவும் பெரிதும் உதவுகின்றது. சியா விதைகளிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.
இதையும் படிங்க: இந்த 6 மட்டும் போதும்.. உங்க இதயத்தை சும்மா இரும்பு மாதிரி ஸ்ட்ராங்கா ஆக்க...
வால்நட்
வால்நட் அதிக அளவில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. வால்நடானது இதே ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பசியை குறைக்கவும் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை அளிக்கும்மோனாச்சுரேட்டட் என்ற கொழுப்புகள் உள்ளது. வால்நட்டில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறந்த ஆரோக்கிய நன்மைகளைப் பெற வால்நட்டை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது.
இதையும் படிங்க: பாகற்காயுடன் இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க! விஷயத்திற்கு சமமாம்..!
ராஜ்மா
ராஜ்மா பருப்பு வகைகளில் ஒன்றாகும். இதிலும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. ராஜ்மாவில் புரதம் வைட்டமின்கள் கால்சியம் இரும்புச்சத்து மற்றும் காதுகள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் வளரும் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. முக்கியமாக இது வயதாகும் போது எலும்பு தேய்மானம் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் ஓமேகா 3 சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை பெற இதை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.