பாகற்காயுடன் இந்த 6 உணவுகளை சாப்பிடாதீங்க! விஷயத்திற்கு சமமாம்..!
Bitter Gourd : பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், இதை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதாம். அது என்னென்ன உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.
பலருக்கும் பிடிக்காத காய்கறிகளில் ஒன்று பாகற்காய். காரணம் அதன் சுவை கசப்பாக இருக்கும். சிலர் கட்டாயத்தின் பெயரில் அதை சாப்பிடுவார்கள். ஆனால், பாகற்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது தெரியுமா?
அதுவும் குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது அருமருந்து என்றே சொல்லலாம். பல நன்மைகள் நிறைந்த இந்த காய்கறியை சில உணவுகளோடு சேர்த்து சாப்பிடக்கூடாதாம். அது என்னென்ன உணவுகள் என்று இந்த கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
பால் : பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், பாகற்காய் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் பால் குடிக்கவே கூடாது. மீறினால், மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
தயிர் : பாகற்காயையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படும். இதனால் தோல் வெடிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வாழைப்பழம், மாம்பழம் : பாகற்காயுடன் வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து சாப்பிடவே கூடாது. மாம்பழம் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால், பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி, டயேரியா, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது.
இறைச்சி : சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி சாப்பிடும் நேரத்தில் பாகற்காய் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை இரண்டும் சேரும்போது உணவின் சுவை கெடுவது மட்டுமின்றி, இதனால் செரிமான பிரச்சனைகளும் ஏற்படும்.
இதையும் படிங்க: டெங்குவில் இருந்து மீண்டு வர பாகற்காய் உதவுமா? அதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
வெண்டைக்காய் : வெண்டைக்காயையும், பாகற்காயையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் உணவு ஜீரணிப்பதில் சிரமமாகும்.
இதையும் படிங்க: இனிமே கசப்பா இருக்குன்னு பாகற்காயை தவிர்க்காதீங்க.. எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
முள்ளங்கி : முள்ளங்கியையும் பாகற்காயையும் சேர்த்து சாப்பிடவே கூடாதாம். மீறி சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மேலும் வாந்தி, தலை சுற்றல், குமட்டல், மந்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.