சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
1. தினமும் காலை சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவாக குறையும்.
2. நெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் உள்ளே இருந்து சுத்தம் செய்து, நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
3. சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்து வந்தால் வளர்ச்சியை மாற்றம் செயல்முறைகள் மிகவும் சீராக செயல்படுவது மட்டுமின்றி, அஜீரண கோளாறு பிரச்சனையையும் தீர்க்கும்.
4. நெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும் மற்றும் தொப்பையும் குறையும்.
5. உங்களுக்கு பலவீனமான நினைவாற்றல் இருந்தால் சூடான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்து வந்தால் உங்களது நினைவாற்றல் கூர்மையாகும்.