
பலருக்கும் தலையில் அடர்த்தியான கருமையான முடி இருப்பது தான் பிடித்தமாக இருக்கும். தன்னை வழுக்கை தலையாக கற்பனை செய்து கொள்ள கூட யாருக்கும் விருப்பம் இருப்பதில்லை. சினிமாவில் கூட வழுக்கை தலையாக இருப்பவரை கதாநாயகனாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. வழுக்கை தலையோடு இருக்கும் இளம் வயதினரை கிண்டல் செய்யும்போக்கு கூட உள்ளது. இதனால் பலர் தங்களின் சுயமதிப்பை இழந்து தவிக்கும் நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறது.
வழுக்கை தலையும் அழகுதான் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அதனால் தான் தலையில் முடி உதிரும் போது அதை மீண்டும் வளர செய்வதற்காக மக்கள் போராடுகின்றனர். முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்யும் முயல் ரத்த எண்ணெய், மூலிகை எண்ணெய், அமேசான் காடுகளின் எண்ணெய்யை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பொடுகை விரட்டும் எளிய வழி.. தயிர் வைத்து தலையை 'இப்படி' சுத்தம் பண்ணுங்க!!
முடி ஒருவரின் ஆளுமைக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, சரியான முடி பராமரிப்பு இல்லாதது, தூக்கமின்மை, மன அழுத்தம், செயற்கையாக தயார் செய்த பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் முடி உதிர்வு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. முடியை வளர செய்ய ஆயிரக்கணக்கில் மக்கள் காசு செலவு செய்துவருகின்றனர். ஆனாலும் சிலர் தலையில் முடி வளரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. இந்த மாதிரி நபர்களின் முடி உதிர்வை குறைத்து வழுக்கை தலையில் முடியை வளர செய்ய இங்கு சில வழிகளை காணலாம்.
இதையும் படிங்க: உங்க முடி அடர்த்தியாக வளர 'இத' சாப்பிட்டாலே போதும்; கட்டுக்கடங்காமல் வளரும்..!
முடி உதிர காரணங்கள்:
முடி உதிர்வதை தடுப்பதற்கு முதலில் முடி ஏன் உதிர்கிறது? என்ற காரணங்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதை கண்டுபிடித்தால் தான் முடி உதிர்வை தடுக்க முடியும். சிலருக்கு ஹார்மோன் சீரற்று சுரப்பதால் முடி உதிர வாய்ப்புள்ளது. போதிய ஊட்டச்சத்து இல்லாமை, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை கூட முடி உதிர காரணங்களாகும். எப்போதும் பதற்றத்துடன் இருப்பவர்களுக்கும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு போன்ற தாதுக்கள் குறைபாடு, வைட்டமின் குறைபாடு இருந்தாலும் முடி உதிரும். தைராய்டு கோளாறு உள்ளவர்களுக்கும், பிசிஓடி பிரச்சனை உள்ளவர்களுக்கும் உடலில் ஹார்மோன் சமநிலையில் இருக்காது. அவர்களுக்கும் முடி உதிரலாம். முறையற்ற முடி பராமரிப்பும் முடி விரைவாக உதிரத் தொடங்கும்.
முடி உதிர்வை குறைக்க டிப்ஸ்:
ரோஸ்மேரி எண்ணெய் முடி உதிர்வை குறைப்பதில் நல்ல பலன்களை தரும். இந்த எண்ணெய்யை தேய்ப்பதால் உங்களுடைய உச்சந்தலையில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதனால் புதிய முடிகள் வளர்கின்றன. இந்த எண்ணெய் வீரியமானது என்பதால் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். தனியாக ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
இந்த எண்ணெய்யை இரவில் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதும். இதை தொடர்ந்து செய்வதால் விரைவில் முடி வளரத் தொடங்கும்.
ரோஸ்மேரி எண்ணெய் நன்மைகள்:
ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்துவதால் தலையில் உள்ள மயிர்க்கால்கள் மறுபடி செயல்பட தொடங்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படாது. இது முடியை வேரிலிருந்து பலப்படுத்தும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின்கள் முடியை வேரில் இருந்து வளர்க்கும். இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்து போராட உதவும். இந்த எண்ணெய் பொடுகை முற்றிலும் குறைக்கும். இந்த எண்ணெய் முடியை உறுதியாக்கி முடி உதிர்வை கணிசமாகக் குறைக்கும்.