காலையில் இந்த '5' விஷயங்களை செய்யாதீங்க; பல நோய்களுக்கு ஆளாவீங்க!

First Published | Dec 2, 2024, 8:42 AM IST

Bad Morning Habits : காலை எழுந்ததும் செய்யும் சில பழக்கங்கள் உங்கள் முழு நாளையும் கெடுத்து, உங்களது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அந்த 5 பழக்கங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

Bad morning habits to avoid in tamil

காலை பொழுது நன்றாக ஆரம்பித்தால் அந்நாள் முழுவதும் நன்றாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒன்று உள்ளது. அந்தவகையில், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அதிலும் குறிப்பாக நாம் காலையில் தூங்கி எழுந்தவுடன் தெரிந்தோ தெரியாமலோ சில பழக்கங்களை பின்பற்றுகிறோம்.  இதனால் அந்நாள் முழுவதும் சோம்பல், சோர்வு மற்றும் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறோம். இந்த பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 

Bad morning habits to avoid in tamil

மேலும் அப்படி காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் சில பழக்கங்கள் அந்நாள் முழுவதையும் பாதிப்பது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது. எனவே காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத 5 பழக்கங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  காலையில் எழுந்ததும் இந்த '5' விஷயங்களை முதல்ல செய்ங்க! ஆரோக்கியமா இருப்பீங்க!!

Latest Videos


Bad morning habits to avoid in tamil

காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத 5 பழக்கங்கள்:

1.  காலை அதிக தூக்கம்:

காலையில் படுக்கையில் இருந்து எழுவதை நம்மில் பலர் சிரமமாக உணர்வார்கள். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்குமே என்று அதிக நேரம் படுக்கையில் தூங்குவார்கள். ஆனால் இப்படி காலையில் அதிக நேரம் தூங்குவது நல்லதல்ல. ஏனெனில் இது நாள் முழுவதும் உங்களை சோர்வாக வைத்திருக்கும். அதுமட்டுமின்றி இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்களது ஆரோக்கியமும் பாதிக்கப்படும்..

Bad morning habits to avoid in tamil

2. எழுந்தவுடன் மொபைலை பார்ப்பது:

காலையில் எழுந்தவுடன் படுகையில் இருந்தபடியே பலர் மொபைல் பார்ப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. காலை எழுந்தவுடன் படுக்கையில் படுத்து கொண்டு மணி கணக்கில் மொபைல் பார்த்தால், மொபைலில் இருந்து வரும் நீல ஒளி உங்கள் கண்களை மோசமாக பாதிக்கும். அதுமட்டுமின்றி நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள்.

Bad morning habits to avoid in tamil

3. தண்ணீர் குடிக்காமல் இருப்பது:

சிலர் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கிறார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் இது உங்களது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக உணர வைக்கிறது. அதிலும் குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் சூடான நீர் குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைப்பது மட்டுமின்றி, சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

Bad morning habits to avoid in tamil

4. புகைப்பிடிப்பது:

காலை எழுந்தவுடனே சிலர் புகை பிடிப்பதை பழக்கமாக்கியுள்ளனர். அப்படி புகைப்பிடித்தால் தான் அவர்களுக்கு அந்த நாள் நன்றாக இருக்கும் என்று உணர்வார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்ல. காலை எழுந்தவுடன் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் வருவதற்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க:   நோய் வரும் முன் காக்க!! '30' வயசுக்கு மேல பெண்கள் சாப்பிடக் கூடாத '5' உணவுகள்!!

Bad morning habits to avoid in tamil

5. காலை உணவு தவிர்ப்பது:

காலை உணவு தவிர்த்தால் எடையை சுலபமாக குறைக்கலாம் என்று பல நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்த பழக்கம் உங்களுக்கு நன்மைக்கு பதிலாக மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? ஆம், காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே காலையில் சத்தான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

click me!