தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. தற்போதும் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் ஒன்றில் நடித்து வரும் தேவயானி, அவ்வப்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.