Guru Purnima July 2022
ஜோதிடத்தில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கை மற்றும் நட்சத்திரங்கள் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.இது 12 ராசிகளின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும் இருப்பினும், இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும்.
ஜூலை 13-ம் தேதி புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. ஒரு ராசியில் மாற்றம் ஏற்பட்டாலே பலரது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படி இருக்க புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால், சொல்லவா வேண்டும். நிச்சயம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு செல்வம் கொட்ட போவது நிச்சயம். அப்படியாக யார் யார் அந்த அதிஷ்ட சாலிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க.....Sukran Peyarchi: ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் பிரவேசம்....இந்த ராசிகளுக்கு இன்னும் 10 நாட்களில் தலைவிதி மாறும்..
Guru Purnima July 2022
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்வில் நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில்தொழிலில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் பண வரவு உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் கைக்கு வரும்.
Guru Purnima July 2022
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கால கட்டத்தில் பேச்சில் இனிமை இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வீடு, வாகனம் ஆகிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். புதனின் சஞ்சாரம் மாணவர்களுக்கு சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்இல்லறம் சிறக்கும். புது ஒளி உண்டாகும்.