
எப்பொழுதும் பிரியாணி என்றாலே அதை விரும்பி உண்ண பெரும்பாலான மக்கள் காத்திருப்பார்கள்.சமீப காலமாக பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. இன்றைய நவீன காலத்தில், பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு.
உலகம் முழுவதும் பிரியாணி மக்கள் மீதுள்ள பிரியாணி அன்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 ஆம் தேதி உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. பிரியாணி உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டாலும், குறிப்பாக இந்தியர்களுக்கு தனி இடம் உண்டு. பிரியாணி சைவம் மற்றும் அசைவ உணவு வகையாகும். பிரியாணி வழங்கும் உணவகங்கள் மற்றும் தாபாக்களை பற்றிய சிறப்பு தொகுப்பு இதுவாகும்.
பிரியாணி சுவைகளில் பல வகைகள் உண்டு. தேங்காய் பால் பிரியாணி, இது கேரளாவில் அதிக அளவு செய்யப்படுகிறது. திண்டுக்கல் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, வேலூர் பிரியாணி இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பிரியாணி பிடிக்கும். அப்படியாக, இந்தியாவின் சிறந்த உணவகங்களின் பட்டியலை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
திண்டுக்கல் தலப்பாக்கட்டி:
தென் பகுதி சுவை உங்களுக்கும் பிடிக்கும் என்றால், சென்னை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பத்தாண்டுகளுக்கு முன்பு நாகசாமி நாயுடுவால் தொடங்கப்பட்டது. இங்கு வழங்கப்படும் பிரியாணி சிறந்த தரம் வாய்ந்தது. பாஸ்மதி, சீரக சம்பா, பொன்னி அரிசியுடன், இளம் ஆட்டி குட்டியின் துண்டுகளுடன் சமைக்கப்பட்டு, பரிமாறப்படுகிறது. இதன் மணம் பத்து தெரு தாண்டி மணக்குமாம்.
ஆம்பூர் பிரியாணி:
ருசி மற்றும் தனித்தன்மையால் ஆம்பூர் பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது. ஆம்பூரில் செய்யும் பிரியாணியானது கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, உயர் ரக பாஸ்மதி அரிசி மற்றும் தரமான மசாலா பொருட்கள் கொண்டு பாலாற்று நீர் கலந்து பிரியாணி செய்வதால் இதன் சுவை எச்சில் ஊற வைக்கிறது.
டெல்லி நசீர் இக்பாலின் சுவையான மட்டன் பிரியாணி:
டெல்லியின் நசீர் இக்பாலின் சுவையான மட்டன் பிரியாணி நறுமணமான அரிசி, இறைச்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து சமைக்கப்படுகிறது. இது உலகளவில் புகழ் பெற்ற உணவு வகை என்றும் கூறலாம். டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ள, பாரம்பரிய இரும்பு பித்தளை பாத்திரங்கள் சமைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் மட்டன் ஸ்டாக் எனப்படும் வேக வைக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
லல்லா பிரியாணி
லல்லாவின் பிரியாணி, லக்னோவில் உள்ள சௌபாட்டியன் சௌக்கில் அமைந்துள்ள, முற்றிலும் துல்லியமாக சமைக்கப்பட்ட சுத்தமான இறைச்சி மற்றும் மணம் கொண்ட அரிசியை உங்களுக்கு வழங்குகிறது. பிரியாணியில் நறுமணம் மற்றும் சுவைகள் நாவில் சுவை எச்சில் ஊற வைக்கும்.