Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..

First Published | Oct 2, 2022, 8:01 AM IST

Cholesterol Diet: ஒருவர் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த முறையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 

இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம்  போன்ற காரணங்களால் ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுகிறது.  அதே நேரத்தில், புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

மனித உடலில், அதாவது, இரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப் புரதத்தின் அளவு அதிகமாக இருந்தால், மாரடைப்பு ஆபத்து ஏற்படும். எனவே, ஒருவர் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த முறையான உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Tap to resize

நார்ச்சத்து கொலஸ்ட்ராலைப் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது உடலில் இருந்து ஒட்டுமொத்த கழிவுகளையும் அகற்ற உதவுகிறது. 

திராட்சையின் நன்மைகள்:

நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் திராட்சையில் காணப்படுகின்றன.

பாதம்:

 பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொலஸ்ட்ராலை அகற்றுவதில் திறம்பட செயல்படுகின்றன. 

ஆளி விதைகள்:

மேலும், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.

ஓட்ஸ்

நார்ச்சத்து நிறைந்த, ஓட்ஸ் உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதைக் குறைக்கலாம். இது உடலில்  இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதில் நார்ச்சத்து அதிகம். இது எடையை குறைத்து, உடலில் தங்கியிருக்கும் தேவைக்கு அதிகமான கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

புரதம்:

உடலில் புரதம் நிறைந்த முட்டை, சால்மன், எடமாம், பச்சை பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை,பீன்ஸ், முளைகட்டிய பயிறு  மற்றும் இறால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது உடலில் கொலாஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.  

banana

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல தாதுக்களுடன் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் நிறைந்துள்ளன. இது பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். வாழைப்பழம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.


சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும், ஆரோக்கியமான கொழுப்பை அதிகரிக்கவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவற்றில் உள்ளன. வைட்டமின் சி இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆகையால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த பழங்கள் சாப்பிட வேண்டும்.

வெள்ளரி, இஞ்சி,  புதினா  சேர்க்கலாம்:

ஒருவர் வெள்ளரி, இஞ்சி, புதினா போன்றவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. மேலும், இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.  

மேலும் படிக்க...உப்பு கறை படிந்த உங்கள் பாத்ரூமை கூட..வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்து பளிச்சென்று மின்ன வைப்பது எப்படி?

Latest Videos

click me!