புறாக்கள் பொதுவாக வீட்டின் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஏசி போன்றவற்றில் கூடு கட்டும். ஒரு வீட்டில் விலங்குகள், பறவைகள், மற்றும் பூச்சிகள் கூடு கட்டுவது வாஸ்து சாஸ்திரத்தில் மங்களகரமானது. ஆனால், ஆன்மிக ரீதியாக வீட்டில் புறா கூடு கட்டுவது அசுபமாக கருதப்படுகிறது. புறாக் கூடு கட்டுவது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அதேபோன்று புறாவை வீட்டில் வளர்ப்பது ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க...Sukran peyarchi 2022: சுக்கிரன் அஸ்தமனம் ஆனது..சிறப்பான வாழ்வை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா..?
சகுனங்களின் படி, லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற வீட்டிற்கு வரும் புறாக்களுக்கு உணவளிக்கவும். ஜோதிட சாஸ்திரப்படி இப்படிச் செய்வதால் ஜாதகத்தில் வியாழன் மற்றும் புதன் நிலை வலுப்பெறும். இது தவிர, இந்த புறாவின் வருகை வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். அதிகாலையில் புறா சத்தம் கேட்டால், அது நன்மையின் அடையாளம்.
ஜோதிட சாஸ்திரப்படி புறாவுக்கு உணவளிப்பதால் ராகு கிரக தோஷங்கள் நீங்கும்.. ஆனால் புறாக்களுக்கு தானியங்களை வீட்டின் கூரையில் போடக்கூடாது, முற்றத்தில் தானியங்களை வைக்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவிழந்திருந்தால் கண்டிப்பாக புறாவிற்கு உணவளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதனின் தீய விளைவுகளை குறைக்கலாம். புறாக்களுக்கு உணவளிப்பதால் பணப் பிரச்சனைகள் நீங்கும். இவ்வாறு செய்வதால் அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும்.