Cancer: புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 நார்ச்சத்து உணவுகள்

Published : Aug 15, 2025, 04:14 PM IST

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் நார்ச்சத்து நிறைந்த ஏழு உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
17
நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மைய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

27
நார்ச்சத்து

உணவில் நார்ச்சத்தை அதிகரிப்பது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவும், குறிப்பாக சில வகையான ஜீரண மண்டல புற்றுநோய்களுக்கு. அதிக நார்ச்சத்து உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

37
ஓட்ஸ், ராகி, பார்லி

கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், ராகி, பார்லி போன்றவற்றில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் குடல், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் அபாயம் பெருமளவு குறைகிறது.

47
பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. சன்னா தால், மசூர் தால், மூங் தால், உளுந்து, ராஜ்மா போன்றவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.

57
காலிஃபிளவர்

வெண்டைக்காய், பாலக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்காய், பூசணிக்காய், கேரட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்றவையும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் உணவுகளாகும்.

67
ஸ்ட்ராபெர்ரி

கொய்யா, பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள் (தோலுடன்), பேரிக்காய், சப்போட்டா, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, நாவல்பழம், திராட்சை போன்றவையும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் பழங்களாகும்.

77
பாதாம், வால்நட்

பாதாம், வால்நட், பிஸ்தா, ஆளி விதை, சியா விதைகள், எள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவையும் வயிறு, பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories