ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கர்வர்த்தி இடம் பெற்றுள்ளார். இவர் 2020 ஐபிஎல் மிக சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
2020 ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் தொடரில் சாதனை படைத்தார்.இது வெறும் ஒரு உள்ளூர் வீரரின் சாதனை பந்துவீச்சு மட்டுமல்ல. இதன் பின் கடும் வலி நிறைந்துள்ளது
2019 ஐபிஎல் தொடரில் மிஸ்டரி ஸ்பின்னர் என்றார் அடையாளத்துடன் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்றது. அவரை வாங்க அஸ்வின் கேப்டனாக இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முயற்சி செய்தது. மற்ற அணிகளும் போட்டி போட அவர் 8.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்
அந்த சீசனில் அவர் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஒரு போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசி அதிக ரன்கள் கொடுத்து இருந்தார். அப்போது அவரது ஏலத் தொகை அதிகம் என கடுமையாக கிண்டல் செய்யப்பட்டார்.
கடும் விமர்சனத்தால் தவித்த வருண் சக்கரவர்த்திக்கு அடுத்த அடியை கொடுத்தது பஞ்சாப் அணி. 2020 ஐபிஎல் ஏலத்துக்கு முன் அவரை அணியில் இருந்து நீக்கியது. அவர் மீண்டும் ஏலத்தில் இடம் பெற்றார். இந்த முறையும் அவரை வாங்க போட்டி இருந்தது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் அவரை நம்பி ஏலத்தில் 4 கோடிக்கு கொல்கத்தா அணியை வாங்க வைத்தார். அவர் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த சீசனில் பந்து வீசி வருகிறார் வருண் சக்கரவர்த்தி
அதன் உச்சகட்டமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் அள்ளினார் வருண். இந்தப் போட்டியில் டெல்லி அணி 195 ரன்கள் இலக்கை துரத்திய போது, வரிசையாக 5 மிடில் ஆர்டர் வீரர்களை வீழ்த்தினார் வருண்.