ஐபிஎல் 2020: பரிதாப பஞ்சாப்.. சன்ரைசர்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்து படுதோல்வி..!

First Published Oct 9, 2020, 12:06 AM IST

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பஞ்சாப் அணி.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கும் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், பேர்ஸ்டோ ஆகிய இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். வார்னர் சற்று நிதானமாக ஆட, தாறுமாறாக அடித்து ஆடிய பேர்ஸ்டோ சதத்தை நெருங்கி கொண்டிருக்கையில், வார்னர் 16வது ஓவரில் பிஷ்னோயின் சுழலில் வீழ்ந்தார்.
undefined
15 ஓவர் வரை பஞ்சாப் அணியால் முதல் விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியவில்லை. 40 பந்தில் 52 ரன்கள் அடித்து வார்னர் ஆட்டமிழக்க, அதே ஓவரில் 4வது பந்தில் பேர்ஸ்டோ 97 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 55 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர் மனீஷ் பாண்டே ஒரு ரன்னிலும் அப்துல் சமாத் 8 ரன்களிலும் ப்ரியம் கர்க் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 160 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ், 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மாவும் அடித்து ஆட, ஒருவழியாக 200 ரன்களை கடந்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 201 ரன்களை குவித்து 202 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்தது.
undefined
202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 9 ரன்னில் ரன் அவுட்டானார். அதன்பின்னர் 3ம் வரிசையில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே தலா 11 ரன்களிலும் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும் மந்தீப் சிங் ஆறு ரன்களிலும் என ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிகோலஸ் பூரான், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டார்.
undefined
17 பந்தில் அரைசதமடித்த பூரான், தனி ஒருவனாக போராட, மறுமுனையிலிருந்து ஆதரவு கிடைக்காததால், அவர் ஒருவரே அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், 37 பந்தில் 77 ரன்கள் அடித்து ரஷீத் கானின் பந்தில் ஆட்டமிழக்க, டெயிலெண்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாக, 17வது ஓவரில் 132 ரன்களுக்கே ஆல் அவுட்டான பஞ்சாப் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
இந்த போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, ஆறு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை பிடித்தது.
undefined
click me!