ஐபிஎல் 2020: எல்லாத்துக்கும் ஒரு மனுஷனையே குற்றம் சொல்லக்கூடாது..! தோனிக்காக வரிந்துகட்டிய முன்னாள் வீரர்

First Published Oct 8, 2020, 9:13 PM IST

சிஎஸ்கேவின் தோல்விகளுக்கு தோனி மீது மட்டுமே குற்றம் சொல்லக்கூடாது என அவரது கேப்டன்சியில் ஆடிய முன்னாள் ஸ்பின்னர் கொதித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு, இதுவரை சரியாக அமையவில்லை.
undefined
ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணியான சிஎஸ்கே, இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஹாட்ரிக் தோல்வி; பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றியுடன் கம்பேக் கொடுத்த சிஎஸ்கே, கேகேஆருக்கு எதிராக 168 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 157 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
undefined
ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 50 ரன்களுக்கு வாட்சன் அவுட்டாகும்போது, அணியின் ஸ்கோர் 13.1 ஓவரில் 101 ரன்கள். வாட்சனுக்கு முன் டுப்ளெசிஸ் மற்றும் ராயுடு ஆகிய இருவர் மட்டுமே ஆட்டமிழந்திருந்தனர். எனவே சாம் கரன், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ ஆகிய பேட்ஸ்மேன்கள் பின்வரிசையில் இருந்தும், எஞ்சிய 7 ஓவரில் 67 ரன்களை அடிக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது.
undefined
தோனி 12 பந்தில் 11 ரன்கள் அடித்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜடேஜா பெரிய ஷாட்டுகளை ஆடினாலும், ஏற்கனவே கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த கேதர் ஜாதவ், பெரிய ஷாட்டுகளை அடிக்கமுடியாமல் திணறியதுடன், 12 பந்தில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றது சிஎஸ்கே. டெத் ஓவர்களை சுனில் நரைனும் ஆண்ட்ரே ரசலும் இணைந்து அருமையாக வீசினர்.
undefined
கேதர் ஜாதவிற்கு பதிலாக, அந்த சூழலில் பவர் ஹிட்டர் பிராவோவை இறக்கியிருக்கலாம். ஆனால் பிராவோவை இறக்கவில்லை. சிறந்த ஃபினிஷர் என்று பெயரை பெற்று, அதையே தனது அடையாளமாக கொண்டிருக்கும் தோனியும், இந்த சீசனில் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
undefined
இதையடுத்து கேதர் ஜாதவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக கிண்டலடித்து மீம்ஸ் பதிவிட்டுவருகின்றனர். மந்தமாக ஆடுவதாக தோனியையும் விமர்சித்துவருகின்றனர். இந்த சீசனில் சில போட்டிகளில் தோனி களத்தில் இருந்தும் கூட, அவரால் அணிக்கு வென்றுகொடுக்க முடியவில்லை.
undefined
இந்நிலையில், தோனியை விமர்சிப்பவர்களுக்கு அவரது கேப்டன்சியில் இந்திய அணியில் ஆடிய முன்னாள் ஸ்பின்னர் பிரக்யன் ஓஜா பதிலடி கொடுத்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசிய ஓஜா, கேகேஆருக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வியின்போது மட்டுமல்ல; சிஎஸ்கே எப்போதெல்லாம் தோற்கிறதோ, அப்போதெல்லாம் தோனி விமர்சிக்கப்படுகிறார். இதை தொடர்ச்சியாக ரசிகர்கள் செய்துவருகின்றனர். ஒரு தனிநபர் எப்படி எல்லாவற்றிற்கும் பொறுப்பாக முடியும். தோனியை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது. நாம் நினைத்தபடியெல்லாம் தோனி ஆடமுடியாது.
undefined
அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் சிக்கல் தெரிந்துதான் தோனி, அவரது பேட்டிங் ஆர்டரை மாற்றி மாற்றி சூழலுக்கேற்ப களத்திற்கு வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக சிஎஸ்கேவிற்காக ஆடிவரும் ரெய்னா, இந்த சீசனில் ஆடவில்லை. கேதர் ஜாதவும் சரியாக ஆடுவதில்லை. எனவே அதையெல்லாம் ஈடுகட்ட வேண்டும் என்பதால், இது மிகக்கடினமான பணி என்று ஓஜா தெரிவித்துள்ளார்.
undefined
click me!