ஐபிஎல் 2020: ஏதோ ஒரு பிரச்னை இருக்கு.. தோனி கண்டிப்பா இதை செய்தே தீரணும்..! பிரயன் லாரா அறிவுரை

First Published Oct 8, 2020, 6:53 PM IST

சிஎஸ்கே அணி குறித்தும் கேப்டன் தோனியின் ஃபினிஷிங் திறமை குறித்தும் பிரயன் லாரா பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு, இதுவரை சரியாக அமையவில்லை.
undefined
ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணியான சிஎஸ்கே, இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் ஆடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஹாட்ரிக் தோல்வி; பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றியுடன் கம்பேக் கொடுத்த சிஎஸ்கே, கேகேஆருக்கு எதிராக 168 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 157 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
undefined
ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 50 ரன்களுக்கு வாட்சன் அவுட்டாகும்போது, அணியின் ஸ்கோர் 13.1 ஓவரில் 101 ரன்கள். வாட்சனுக்கு முன் டுப்ளெசிஸ் மற்றும் ராயுடு ஆகிய இருவர் மட்டுமே ஆட்டமிழந்திருந்தனர். எனவே சாம் கரன், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, பிராவோ ஆகிய பேட்ஸ்மேன்கள் பின்வரிசையில் இருந்தும், எஞ்சிய 7 ஓவரில் 67 ரன்களை அடிக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது.
undefined
தோனி 12 பந்தில் 11 ரன்கள் அடித்து முக்கியமான நேரத்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜடேஜா பெரிய ஷாட்டுகளை ஆடினாலும், ஏற்கனவே கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்த கேதர் ஜாதவ், பெரிய ஷாட்டுகளை அடிக்கமுடியாமல் திணறியதுடன், 12 பந்தில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். அதனால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றது சிஎஸ்கே. டெத் ஓவர்களை சுனில் நரைனும் ஆண்ட்ரே ரசலும் இணைந்து அருமையாக வீசினர்.
undefined
கேதர் ஜாதவிற்கு பதிலாக, அந்த சூழலில் பவர் ஹிட்டர் பிராவோவை இறக்கியிருக்கலாம். ஆனால் பிராவோவை இறக்கவில்லை. சிறந்த ஃபினிஷர் என்று பெயரை பெற்று, அதையே தனது அடையாளமாக கொண்டிருக்கும் தோனியும், இந்த சீசனில் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
undefined
இந்நிலையில், சிஎஸ்கே அணி குறித்தும் தோனி குறித்தும் சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் லெஜண்ட் வீரர்களில் ஒருவரான பிரயன் லாரா பேசியுள்ளார்.
undefined
சிஎஸ்கே குறித்தும் தோனி குறித்தும் பேசிய லாரா, தோனியால் போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியாதது ஆச்சரியமாகத்தான் உள்ளது. எந்த ஆர்டரிலும் இறங்கி போட்டியை முடித்துவைக்க வேண்டும் என்று நினைக்கிறார் தோனி. ஆனால் அவரைத்தவிர வேறு சில வீரர்களை அந்த ரோலுக்கு உருவாக்க வேண்டிய இடத்தில் தோனி இருக்கிறார்.
undefined
பிராவோ கடந்த 2 போட்டிகளிலுமே ஆடினார். ஆனால் ஆல்ரவுண்டரான அவருக்கு 2 போட்டிகளிலுமே பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி 10 ஓவரில் வெறும் 58 ரன்கள் அடிக்கமுடியாமல் தோற்கிறார்கள். ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. தோனி சிறந்த ஃபினிஷர் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு ஏதோ சில விஷயங்கள் சரியில்லை. ஜடேஜா கடைசியில் நன்றாக ஆடினார். எனவே தோனி சில விஷயங்களில் கவனம் செலுத்தி அணியை சரிப்படுத்த வேண்டும் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.
undefined
click me!