SRH vs KXIP: என்னது இன்னக்கி மேட்ச்லயும் அவரு ஆடலையா..? அட போங்கப்பா.. சன்ரைசர்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

First Published Oct 8, 2020, 4:04 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை இன்றைய போட்டியில் எதிர்கொள்ளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. கேகேஆர் அணியும் புள்ளி பட்டியலில் டாப் 4ல் உள்ளது.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் 2 வெற்றிகளுடன், புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்திலும் பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் இந்த 2 அணிகளும் மோதுகின்றன.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இந்த சீசனிலிருந்து விலகியதையடுத்து, அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாரும் காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
undefined
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கூட புவனேஷ்வர் குமார் ஆடவில்லை. அந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் கலீல் அகமதுவுக்கு பதிலாக சந்தீப் ஷர்மாவும், சித்தார்த் கவுலும் களமிறங்கினர். சந்தீப் ஷர்மா சிறப்பாக பந்துவீசிய நிலையில், சித்தார்த் கவுல் 4 ஓவரில் 64 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
undefined
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆடிய முதல் போட்டி என்பதால் கூட கவுல் சொதப்பியிருக்கலாம். அவர் சன்ரைசர்ஸுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அவர் நல்ல ஃபாஸ்ட் பவுலர் என்ற வகையில், பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அவர் ஆடுவார். சந்தீப் ஷர்மா, நடராஜன், சித்தார்த் கவுல் ஆகிய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆடும்.
undefined
சன்ரைசர்ஸ் அணி வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. எனினும் பிரியம் கர்க் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இளம் மிடில் ஆர்டர் வீரர்கள் சிஎஸ்கேவிற்கு எதிராக நன்றாக ஆடியதால், அவர்கள் மீதும் அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது. அதனால் கடந்த சில போட்டிகளாக ஆடாத விஜய் சங்கருக்கு இந்த போட்டியிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
undefined
எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் சன்ரைசர்ஸ் அணி, கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தேச ஆடும் லெவன்:டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன், சித்தார்த் கவுல்.
undefined
click me!