SRH vs KXIP: உன்னைய நம்பி எடுத்து நாங்க மோசம் போனது போதும்; யுனிவர்ஸ் பாஸ் கம்பேக்.! KXIP-ல் அதிரடி மாற்றங்கள்

Published : Oct 08, 2020, 02:27 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.   

PREV
19
SRH vs KXIP: உன்னைய நம்பி எடுத்து நாங்க மோசம் போனது போதும்; யுனிவர்ஸ் பாஸ் கம்பேக்.! KXIP-ல் அதிரடி மாற்றங்கள்

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கேஎல் ராகுலின் தலைமையில் களம் கண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படுமோசமான நிலையில் உள்ள அந்த அணி, இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.
 
29

கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மேக்ஸ்வெல், பூரான், சர்ஃபராஸ் கான் ஆகிய அதிரடி வீரர்கள் உள்ளனர். மேலும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்த சீசனில் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். எனவே அந்த அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

39

ஆனால் அந்த அணி இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

49

கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்துவருகின்றனர். நிகோலஸ் பூரானும் ஓரளவிற்கு நன்றாக ஆடுகிறார். பவுலிங்கில் ரவி பிஷ்னோயும் ஷமியும் மட்டுமே நம்பிக்கையளிக்கின்றனர். மற்றபடி மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், ஜிம்மி நீஷம் ஆகிய, பஞ்சாப் அணி பெரிதும் நம்பிய வெளிநாட்டு வீரர்கள் படுமோசமாக சொதப்புகின்றனர்.
 
59

கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் தொடக்க ஜோடி நன்றாக செட் ஆகிவிட்டதால், யுனிவர்ஸ் பாஸ் கெய்லுக்கு முதல் ஐந்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் பெரும் நம்பிக்கையுடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட, அந்த அணியின் முன்னாள் வீரரான மேக்ஸ்வெல், இந்த சீசனில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் வெறும் 41 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

69

பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல்லின் ரோல், ஃபினிஷர். ஆனால் அவர் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் கூட அவரது ரோலை சரியாக செய்யவில்லை. அதுமட்டுமல்லாது, பெரிய ஷாட்டுகளை அடிக்கமுடியாமல் தொடர்ந்து திணறிவருகிறார். எனவே இன்றைய போட்டியில் அவர் நீக்கப்பட்டு கெய்ல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

79

ஏனெனில் கெய்ல், ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கினால், மயன்க் அகர்வால் 3ம் வரிசையில் இறங்குவார். அதனால் பேட்டிங் டெப்த் கிடைக்க வாய்ப்புள்ளது. பூரான் ஃபினிஷர் ரோலை செய்ய முடியும். எனவே மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு கெய்ல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
89

கடந்த போட்டியில் ஆடிய ஸ்பின்னர் ப்ராருக்கு பதிலாக மீண்டும் ரிஸ்ட் ஸ்பின்னர் முருகன் அஷ்வின் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

99

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மயன்க் அகர்வால், மந்தீப் சிங், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், ஷமி, ஷெல்டான் கோட்ரெல்.

click me!

Recommended Stories